வலைப்பதிவில் தேட...

Thursday, May 13, 2010

இரட்டைக்குவளை ஒழிந்தது..





"பொது கிளாசில் டீ கேட்க
தனி கிளாசில் டீ கொடுக்க
ஒரு டீயின் விலை
ஒன்பது உயிர்களாக
மலிந்து கிடக்கிறது.."
                                          -கவிஞர் கந்தர்வன்.

தீண்டாமை ஒழிப்பு ஆண்டு என்று அரசால்
நான் கைந்து ஆண்டுகளுக்கு முன் அறிவிக்கப்பட்டது
அதை ஒட்டி எழுதிய கவிதை இது..

சேரியிலிருந்து ஒரு குரல்:

எத்தனை நாளைக்குதான்
எங்களுக்குத் தனி கிளாஸ்ல
டீ தருவீக
ஒங்களைப்போல
அவங்களைப்போல
நாங்களும் எட்டுச்சாணு
ஓசரமுள்ள மனுஷங்கதானே?

ஊருக்குள் இருந்த  டீக்கடை
மனிதன் ஒருவன்:

ஆயிரத்துக்கும் அதிகப்படியான
ஊருகள்ல தனிக்கிளாஸ் இருக்க
பொதுக்கிளாசில் டீ குடுக்க
நாங்க மட்டும்
பைத்தியக்காரப்பயலுகளா?

மந்திரி முழங்கினார்:

"தீண்டாமை எந்த வடிவத்தில்
நடைமுறைப்படுத்தப்பட்டாலும்
ஒழித்துக்கட்டி விட்டுதான்
மறு வேலை எங்கள் அரசுக்கு
இது மத்ச்சார்பற்ற சமூக
நல்லிணக்க
தீண்டாமை ஒழிய வேண்டிய ஆண்டு"

ஊர்க்காரர்களும் முக்கியஸ்தர்களும்
முடிவெடுத்து அறிவித்தனர்

கொண்டுவாங்கப்பா அந்த
டிஸ்போசிபிள் கிளாசை
நம்ம ஊருல எல்லாம் தாயா
பிள்ளையா இருப்போம்
கிளாசுக்கு எட்டணா கூட
குடுத்திருங்கப்பா...
இந்தா பிடி
டீயைக்குடி

கலெக்டர்  கடிதம் எழுதினார்:
"மாண்பு மிகு முதல்வர்
அவர்கள்
மா நிலத்திலேயே
முதலாவதாக
இரட்டைக்குவளை
முறையை ஒழித்த
............. கிராம சபைக்கூட்டத்தில்
தாங்கள் அவசியம்
பங்கேற்க வேண்டும்....."

7 comments:

nerkuppai thumbi said...

A good one

please keep it up

ராஜ நடராஜன் said...

அர்ஜுனனின் அம்புகள்!

ஜிஎஸ்ஆர் said...

எந்த வரியை குறிப்பிட்டு சொல்வதென்று தெரியவில்லை அத்தனையும் நெத்தியடி வரிகள்

வாழ்க வளமுடன்

என்றும் அன்புடன்

ஜிஎஸ்ஆர் said...

\\நான் ஒரு தாவரவியல் பட்டதாரி. அறிவியல் பட்ட்(ட)த்தை முடித்த பிறகு சமூக அறிவியலை(ப்)படிக்க ஆரம்பித்தேன். அடிமை நுகத்தடியின் கீழ் வாழும் அனைவரின் விடுதலைக்காக(ப்)பாடுபடுவது என்று முடிவுக்கு அனே(நே)கம் பேர் வந்ததை(ப்)போல் நானும் வந்திருக்கிறேன்.குரு ரவிதாஸ், ஆபிரகாம் லிங்கன், ஜோசப் ஸ்டாலின் போன்று ஒரு செருப்புத்தைக்கும் தொழிலாளியின் வாரிசு. கல்வி மறுக்கப்பட்ட சமூகத்திலிருந்து வந்திருக்கிற முதல் தலை முறை கல்விகிடைக்கப்பெற்றவர்\\

இதை நீங்கள் வெளியிட வேண்டாம் தவறை மட்டும் திருத்தி விடுங்கள்

வாழ்க வளமுடன்

என்றும் அன்புடன்
ஞானசேகர்

மதுரை சரவணன் said...

நன்றாக வந்துள்ளது. வாழ்த்துக்கள்

அழகிய நாட்கள் said...

பின்னூட்டம் வழியாக அறிமுகம் ஆகியிருக்கும் நண்பர்கள்
நெற்குப்பை தம்பி,
ராஜ நடராஜன்,
ஜி எஸ் ஆர்,
மதுரை சரவணன்
அனைவருக்கும் வணக்கம்.
ஊக்கமளித்த பதிவுள்ளங்களுக்கு நன்றி
ஞானசேகரன்|
முகப்பின் குறைகளை நீக்கியிருக்கிறேன்.

hariharan said...

அருமை!!!