"ஆடி அடங்கும் வாழ்க்கையடா ....ஆறடி நிலமே சொந்தமடா"
என்ற ஒரு பாடல் தமிழ் சினிமாவில் உண்டு.
பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் அவர்களும் " குட்டியாடு தப்பி வந்தால் குறவனுக்கு சொந்தம் என்ற பாடலில்
"தட்டுக்கெட்டெ மனிதருக்கு கண்ணில் பட்டதெல்லாம் சொந்தம் சட்டப்படி பார்க்கப்போனால் எட்டடிதான் சொந்தம்"
என்று ஒரு வரி சொல்லியிருப்பார்.

உறவினர்கள்/ நண்பர்கள்/ அலுவலக உறவுமுறை என்று யாராவது செத்துப்போனால் சுடுகாட்டுப்பக்கம் போய் பழக்கமுள்ளவர்களுக்கும்
செத்தபிறகு சுடுகாட்டுக்குப்போனால் போதும் என்று இருப்பவர்களும்,
முன்ன பின்ன செத்தாதானே சுடுகாது தெரியும் என்று சொல்பவர்களும் இருக்கிற பூமி இது.
சுடுகாட்டிலிருந்து வாழ்க்கையைத்துவங்கியவர் அல்லது எவனாவது செத்தால்தான் நமக்கு சோறு என்ற நிலையில் இருக்கும் விளிம்பு நிலை
ஆறடி நிலம் என்பது உண்மையல்ல 6க்கு 2 என்பதுதான் ஸ்டாண்டர்டு சைஸ்... அதைத்தான் பட்டுக்கோட்டை எட்டடி என்பார். அது உண்மையில் 12 சதுர அடி...

சுடுகாட்டில் குழி தோண்டுபவர்களுக்கு ஒரு விஷயம் தெரியும் அது ஏற்கனவே தோண்டிய குழியைத்தோண்டுவது. புதுக்குழி தோண்டுவது மிகவும் கடினம் என்பதால்தான் அது. நான் குழி தோண்டும் காலங்களில் மகாலிங்கம் என்ற ஒரு பெரியப்பா என்னோடு இருந்தார். அவர் பழைய குழிகளை காலப்பெட்டகம் போல வைத்திருப்பார்.
அவன் செத்து 2 வருஷம் ஆச்சிடா அந்தக்குழியை வெட்டு என்பார். தோண்டினால் அதில் சில எச்சங்கள் கால் எலும்பு. மண்டை ஓடு, செமிக்காத மயிர்கள் கந்தலான ஆடைகள் என பல ஐட்டங்கள் கிடக்கும் அதையெல்லாம் மண்வெட்டியால் அள்ளி தட்டில் போட்டு புதிய பிணத்தின் சொந்தக்கங்களின் கண்களுக்குத்தட்டுப்படாமல் தூரக்கொண்டுபோய் போட்டு விட்டு வரசொல்லுவார். அந்த வீச்சம் ( வாசம்தான்) குடலைப்பிறட்டும்...
ஆகவே வாழும் போது காடு வீடு மனை மனைவி மக்கள் சொத்து சுகம் என்று வாழ்ந்தவர்கள் சுவிஸ் வங்கி உட்பட பேங்க் பேலன்ஸ் வைத்தவர்கள் அனைவரின் கவனத்திற்கு சொல்லுவதெல்லாம் இதுதான்...
பிறக்கும் போது அம்மணம்
போகும் போது ஒரு மல்லுத்துணி மற்றபடி அதுவும் அம்மணம்தான்
நகை நட்டு பிடுங்கப்படும்
ஆனால் வாழும் போது மட்டும்
ஒரே சவடால்கள்...
ஆர்ப்பரிப்புகள்...
நான் இன்ன சாதி...
நீ குறைந்தவன்...
நான் இன்ன கல்வித்தகுதி உள்ளவன்...
நீ என்னை விட க்கம்மி...
எனக்கு எல்லாம் தெரியும் ...
நான் தான் சிறந்தவன்....
நான் சொல்லுவதுதான் சரி
நான் மட்டும் இல்லையின்னா இது நடந்திருக்குமா...
என பல விளாசல்கள்...
எது எப்படி வேண்டுமானாலும் இருக்கட்டும்...
ஒரு ஆறடி நிலம் கூட யாருக்கும் சொந்தம் இல்லை என்பதுதான்
நிதர்சனமான உண்மை..

5 comments:
ஆறடிகளுக்கு மட்டுமேயான சொந்த உடம்பு இன்று நிலத்தை படுத்துகிற பாடு சொல்லி மாளவில்லை.
நிலத்தில் என்ன பாடு வேண்டுமானாலும் படட்டும். அது உழைப்பு. இறந்தபின்னும் ஒரு நிரந்தர இடம் இல்லை என்பதுதான் உண்மை.மனிதன் பிறக்கவும் இல்லை; இறப்பதும் இல்லை- என்று சொல்லுகிறார் கௌதம புத்தர்...
வணக்கம்...
உங்களின் தளம் வலைச்சரத்தில் அறிமுகப்படுத்தி உள்ளது... வாழ்த்துக்கள்...
மேலும் விவரங்களுக்கு இங்கே (http://blogintamil.blogspot.in/2013/09/blog-post_13.html) சென்று பார்க்கவும்... நன்றி...
நன்றி திரு தனபாலன் அவர்களுக்கு...
வணக்கம் சகோ !உண்மை தாங்க அருமையா சொன்னீங்க வீம்புக்கு விருதுக்கும் வேட்டை ஆடுகிற உலகம் இது.
http://kaviyakavi.blogspot.com/2013/02/blog-post_2105.html
ஆறடிமனிதன் என்ற கவிதை இதற்காகவே எழுதினேன். முடிந்தால் பாருங்கள்.
Post a Comment