வலைப்பதிவில் தேட...

Friday, May 7, 2010

கற்பாறைகளும் தப்பவில்லை

நேற்று வரை
காடுகளை அழித்தீர்கள்
காற்றைக் கணக்கின்றி
களங்கப்படுத்தினீர்கள்
நிலத்தடி நீரை
அபகரித்தீர்கள்
விண் வெளி கூட
விண்கலங்களின்
குப்பைக்கூடை
ஆகிப்போனது
இன்று
கற்பாறைகள் கூட
கற்பழிக்கப்படுகின்றன
உங்களால்
உலகமயம்
இவ்வளவுதானா
இன்னும் இருக்கிறதா
மிச்சம்.
இக்கவிதை எழுதியது செப்டம்பர் 2002

(குலு மணாலியில் கோக், பெப்சி நிறுவனங்கள் பாறைகளில் விளம்பரம் செய்தன;
அதை ஒட்டி நடந்த வழக்கில் உச்ச நீதிமன்றத்தால்   கோடிக்கணக்கான ரூபாய்கள் பன்னாட்டு நிறுவனங்களின் மீது அபராதம் விதிக்கப்பட்டது.)

2 comments:

kashyapan said...

புதுக்கவிதை இருக்கட்டும், நிறைய விபரம் தெரிந்த நீங்கள் நிறைய கட்டுரைகள் எழுதலாமே?...காஸ்யபன்.

அழகிய நாட்கள் said...

நன்றி தோழர் காஷ்யபன்,
கட்டுரைகள்தான் எனது களம். தாங்கள்
எனக்கு இதை உணர்த்தியற்கு.
என்றென்றும்,
திலிப் நாராயணன்.