வலைப்பதிவில் தேட...
Wednesday, April 7, 2010
சீட்டு
எல் கே ஜி வகுப்பு சீட்டுக்கு
பணத்தோடு அலைந்தார் அப்பா
பஸ்ஸில் சீட்டின்றி
நின்று கொண்டே பயணித்தார் பிறகு
அரசாங்க ஒதுக்கீடு இன்ஜினியரிங்
சீட்டுக்கு இவ்வளவு
மேனஜ்மென்ட் சீட்டுக்கு இவ்வளவு
நிர்ணயித்தார் கல்வியாளர்
எம் எல் எ சீட்டுக்கு பணம் கட்டி
காத்திருந்தார் கட்சிக்காரர்
வாக்காலசீட்டோடு
ஓட்டுக்கு எவ்வளவு தருவார்கள்
என்று காத்திருந்தார் வாக்காளர்
ஒன்றரை லட்சத்துக்கு மேல்
இரயில்வே
வேலை இடத்தை நிரப்பசொல்லி
ஊர்வலம் போனார்கள் இளைஞர்கள்
'சீட்டுபிடித்து' பெரியாளானவன்
புதுக்காரில் வலம் வந்தான்
ஒழுங்காக வேலை செய்யவில்லைஎன்றால்
சீட்டைக்கிழித்து விடுவேன் என்றார் முதலாளி
Subscribe to:
Post Comments (Atom)
3 comments:
எத்தனை எத்தனை சீட்டுக்கள். ஆனாலும் ஒரு சிலரே சீட்டு விளையாட்டில் ஜெயித்துக்கொண்டு இருக்கிறார்கள். இனி தொடர்ந்து இங்கு வருவேன்.
தமிழிஸ், தமிழ்மணம் போன்ற திரட்டிகளில் இணைத்தால் பலருக்கும் போய்ச் செருமே உங்கள் சிந்தனைகள்.....
ஆபீசர் வணக்கம்.www.tamilish.com க்குப்போய் tab ல் register ஐ க் க்ளிக் செய்தால்.விவரங்கள்கேட்கும். பூர்த்திசெய்தால் உங்களை தமிலிஷ் உள்ளே இழுத்துக்கொள்ளும்.
மாதவராஜ்
காமராஜ்
இருவருக்கும் வணக்கம். 1977 ல் புகுமுக வகுப்பு முடித்த கையோடு எம் பி பி எஸ் விண்ணப்பித்து விட்டு மதுரை மருதுவக்கல்லூரிக்கு இன்டர்வியூ விக்கு சென்ற சமயம் யாரோ ஒரு மாணவனுக்கு 'சீட்டு' வாங்கித்தருவதற்காக அப்போதுதான் எங்கள் தொகுதியிலிருந்து தேர்வாகியிருந்த எம் எல் ஏ கல்லூரி வளாகத்திற்குள் அலைந்து கொண்டிருந்தார். அதனால் கூட் எனக்கு சீட்டு பறி போய் இருக்கும் அல்லவா? அதனால் தான் இந்தப்பதிவு.
Post a Comment