வலைப்பதிவில் தேட...

Saturday, April 24, 2010

கோத்ரா கலவரம்

நேற்றுதான் ...
நில மகளின் களேபரம்
அடுக்குமாடிகளின்
குடிசை வீடுகளின்
இடிபாட்டில் எம் மக்கள்
தீப்பெட்டிக்குள் மூச்சிழந்த
பொன் வண்டுகளென ...

தப்பியவர்களின் கூடாரங்களில்
அணைக்கமுடியாத
தீண்டாமைத்தீ ...
தனது நாக்கைத்துழாவியது

இயற்கையின் கலவரத்தில்
செயற்கையாய் சாதியின்
தாண்டவம் ....

இன்று ...
மீண்டவர்கள்
கையூன்றி எழும் நேரம்
கலவர்த்தீயில் காந்தி தேசம்
ஆண் பெண் குழந்தைகள்
அனைவரும்
மத வெறியால் மாய்க்கப்பட்டனர்...

வாதத்துக்கு மருந்து உண்டு
மத வாதத்துக்கு என்ன உண்டு?
ஒரு உறைக்குள் ஒரு கத்திதான்
இருக்க முடியும் ...

உனக்குள்ளும் அப்படித்தான்
மதவாளை உடைத்தெறி ...
மனிதக்கேடயம்
கையிலேந்து ...

கோத்ரா வில் பணியாற்றிய போது (மார்ச் ௨00௨ இல் எழுதிய கவிதை இது)

2 comments:

மாதவராஜ் said...

அந்த கொடூரமான நாட்களில் நீங்கள் அங்கு இருந்தீர்கள். அதுகுறித்து உங்கள் அனுபவங்களை இன்னும் எழுதுங்கள். நல்ல பதிவு. தொடர்ந்து கொஞ்ச நாட்களாக தொழிற்சங்க நிமித்தம் ஒரே அலைச்சல். உங்கள் மற்ற பதிவுகளை படிக்க வேண்டும்.

திலிப் நாராயணன் said...

பனிரெண்டு நாட்கள் நாங்கள் அலுவல்கம் செல்ல முடியவில்லை. எப்போது மார்கெட் திறக்கும் என்பது கலெக்டெர் ஜெயந்தி ரவி அவர்களின் குஜராத்தி அறிவிப்பில்தான் இருந்தது.
மாதக்கடைசி என்பதால் பனிரெண்டு நாடகளிலும் ஊழியர்களின் தொலை பேசி அழைப்பு.. சம்பளம் எப்போது கிடைக்கும் என்று..