வலைப்பதிவில் தேட...

Tuesday, February 8, 2011

பிள்ளைகளா வந்து பொறந்திருக்கு ஒண்ணொண்ணும் ஒவ்வொரு ஆயிரம்.

முந்திராவில் ஜவகர் 
நகர்வாலாவில் இந்திரா
சர்க்காரியா கமிஷன் முன்  கருணாநிதிஉர ஊழலில் நரசிம்மா
போஃபோர்ஸ் ஊழலில் ராஜீவ் 
ஆதர்ஷ் ஊழலில் ஒரு விலாஸ்
நில ஒதுக்கீட்டில்/மினரல் கொள்ளைக்கு
ஆதரவாக ஒரு எடியூரப்பா 
காமன் வெல்த் விளையாட்டில் ஒரு சுரேஷ்
கிரிக்கெட் விளையாட்டில் ஒரு சசி 
2ஜி அலைவரிசை ஒதுக்கீட்டில் ஒரு ராசா
மருத்துவ கல்லூரிகளுக்கான ஒதுகீட்டில் ஒரு கேதன் 
அனைத்தையும் மிஞ்சும் வகையில் இன்றைக்கு 
எஸ் பாண்ட் புகழை பரவச்செய்ய ஒரு எம் கே சந்திர சேகர்


இ ந்தப்பட்டியல் முழுமையானதல்ல...
தெரிந்த இந்தப்பெயர்களில் எல்லாம் "சர் நேம்" எனப்படுகிற சாதிப்பெயர் குறிப்பிடவில்லை. 

நேரு,காந்தி,ராவ், தேஷ்முக், கல்மாதி, தரூர், தேசாய் இவையெல்லாம் சாதிப்பெயர்தான்... 


சாதிப்பெயரைக்குறிப்பிடுவது  நமது ஆதி சொந்தங்களுக்கு இந்த மண்ணின் மைந்தர்களுக்கு செய்யும்  முழு துரோகம்

சிறு வயதுகளில் சேட்டை செய்யாத குழந்தைகள் இருக்க முடியாது; 

பொறுமை இழந்த நேரங்களில் அந்தக்குழந்தைகளைக்கண்டிக்கும்போது செல்லமாக அம்மா சில நேரங்களில் இப்படிக்குறிப்பிடுவார்.


"பிள்ளைகளா வந்து பொறந்திருக்கு;
ஒண்ணொண்ணும் ஒவ்வொரு ஆயிரம்".


அன்றைக்கு ஆயிரங்களே பார்க்காத ஏழைக்குடும்பங்கள் அப்படி அலமாந்து சொல்லி மாய்ந்திருந்தார்கள்.


இன்றைக்கும் அப்படிப்பட்ட ஏராளமான குடும்பங்கள் பட்டினி,
பசியில் வீடில்லாமல் வாசலில்லாமல் குடிக்க்த்தண்ணி இல்லாமல்
இந்த தேசமெங்கும்  பரிதவித்திருக்க

கோடி கோடியாய்க்குவித்து வைத்து 
கொண்டாடிக்கொண்டிருக்கிறார்கள்.

இவர்களைத்தட்டிக்கேட்க அம்மாக்கள்தான் இல்லை;

சந்தர்ப்பவசமாக அம்மாமார்கள் உயிரோடு இருந்தாலும்
கேட்கும் நிலையில் இவர்கள் இல்லை போலிருக்கிறது.


காலுக்குச்செருப்புமில்லை
கால் வயிற்றுக்கூழுக்கும்  நாதியில்லை
பாழுக்குழைத்தோமடா என் தோழனே
பசையற்றுப்போனோமடா
                                                           - ஜீவா


வாழ்க  பாரத மணித்திரு நாடு.
                                                           - பாரதி

4 comments:

tamilan said...

CLICK TO READ

====>
நடிகர் விவேக்கும் சாமி சாணிசித்தரும்.
<====


.

திலிப் நாராயணன் said...

திரு தமிழன்,
தங்களது பின்னூட்டத்திற்கும் வலைதள அறிமுகத்திற்கும் நன்றி.

மைதீன் said...

பாரத மாதா, அரசியல்வாதிகளுக்கு அள்ளி அள்ளி கொடுப்பவள். நீதி தேவதை,பினாயக் சென் போன்றவர்களுக்கு அநீதியை இழைப்பவள் .

திலிப் நாராயணன் said...

அருமையான பின்னூட்டம் இட்டிருக்கிறீர்கள் திரு மைதீன். வாழ்த்துகள்.
பேரன்புடன்
திலிப் நாராயணன்