வலைப்பதிவில் தேட...

Thursday, February 3, 2011

ராஜா என்றொரு மந்திரி

'மண் பொய் சொல்லுவதில்லை
மிதிக்கிறோம்
மரங்கள் பொய் சொல்லுவதில்லை
வெட்டுகிறோம்'
மந்திரிகள் பொய் சொல்லுகிறார்கள்
மாலையிடுகிறோம்'
                                                -கவிஞர் கந்தர்வன்

 நமது  சம காலத்தில் வாழ்ந்த அவர் இப்போது  நம்மோடு இல்லை.

அவரது வைர வரிகளை வாழ வைத்துக்கொண்டு இன்றைய மந்திரிகளும் ராஜாக்களும் வலம் வருகிறார்கள்.


2 ஜி என்றைக்கு வந்ததோ அன்று முதல்
பொறுப்பில் இருந்த ராஜா முதற்கொண்டு மந்திரிகள் வரை
ஓரே  பொய்மயம்தான்

பிரதமருக்கு எல்லாமே தெரிந்துதான் நடந்தது - ராசா

அலைவரிசை ஒதுக்கீட்டில் ஏல முறையைப்பின்பற்றவும்-பிரதமர்

ஊழலே நடக்கவில்லை- கருணா நிதி

ராசா மட்டுமே செய்திருக்க வாய்ப்பில்லை- கருணா நிதி

ஜே பி சி வேண்டும்- எதிர்க்கட்சிகள்

முடியாது-பிரணாப்

பொதுக்கணக்குக்குழு முன் ஆஜராகி எனது தரப்பின் வாதங்களை சொல்லத்தயார்- பிரதமர்

அவர் சொன்னபடி ஆஜராகமாட்டார்- மீண்டும் பிரணாப்

பாராளுமன்றம் சுமுகமாக நடைபெறுவதற்காக ராசா ராஜினாமா செய்தார்

சி ஏ ஜி அறிக்கையில் கண்டபடி ஏதும் நடைபெற வில்லை - புதிய மந்திரி கபில் சிபல் (அப்படியானால் ராசாவையே மந்திரியாக நீடிக்கச்செய்திருக்கலாமே!)

அரசுக்கு வர வேண்டிய பைசாவில் ஒரு பகுதிகூட இழப்பில்லை- திட்டக்கமிஷன் துணைத்தலைவர் மாண்டேக் சிங்

முன்னாட்களில் ராஜாக்கள் கைது செய்யப்பட்டிருக்கலாம் இன்னொரு ராஜாவால்.

அது நாடு பிடிக்கும் போட்டியால் நடந்திருக்கும்.

தோற்ற ராஜாவை ஜெயிலில் வைத்து ஜெயித்த ராஜா இம்சைப்படுத்துவது எல்லாம் சகஜமாக இருக்கும்.

வரலாற்றின் பக்கங்களில் இது போன்ற அம்சங்கள் நிறைந்திருக்கின்றன.  நமது ராஜா அப்படிப்பட்டவர் அல்ல;

மந்திரியாக இருந்தவர் (உண்மையில் மந்திரிகள் என்றால் அது சித்தார்த் பெருவாவும்  சந்தோலியாவும்தான்)இப்போது கைது செய்யப்பட்டிருக்கிறார் அவரது ஆலோசகர்களோடு

'நீரா' க்களைக்கைது செய்யாத 'நீரோ'க்களாக அரசும் நாமும்

காலவெளி காத்துக்கிடக்கிறது உண்மைகளைப்பதிவு செய்ய...


2 comments:

Anonymous said...

வணக்கம் உறவுகளே உங்களின் வலைத்தளத்தினை இதிலும் இணையுங்கள்

http://meenakam.com/topsites

http://meenagam.org

திலிப் நாராயணன் said...

ஆதி உறவுகளே!
மலையக சொந்தங்களே
வணக்கம். தங்களின் http://meenam.org தளத்தில் எனது இந்தப்படைப்பையும் இதற்கு முந்தைய படைப்பையும் இணைத்து விட்டேன். ஆனாலும் http://meenakam.com.topsites இல் சேர்க்க முடியவில்லை.
தொடர்ந்து முயற்சிக்கிறேன். வணக்கம்.