வலைப்பதிவில் தேட...

Wednesday, February 2, 2011

நாங்க மனுஷங்கடா

1984 ஏப்ரல் மே மாதங்களில் முனைவர் கே .ஏ குணசேகரனின் நாட்டுப்புற இசைக்குழு மக்களுக்கான பாடல்களை இசைத்து தமிழ் நாட்டையே சுற்றி வந்து கொண்டிருந்தது.

காரைக்குடியில் குதிரைவண்டி ஸ்டாண்டில் ஒரு நிகழ்ச்சிக்கு  நாங்கள் ஏற்பாடு செய்திருந்தோம். கோட்டைச்சாமி, காந்தி அன்னாவி,கங்கை பாலன் மாரியம்மாள் நாதஸ்வர செட் என்று நையாண்டி  மேளத்தில் ரொங்க வைத்து விடுவார்கள்.

நிகழ்ச்சி முடியும் போது கவிஞர் இங்குலாபின் "மனுஷங்கடா" என்ற பாடலைப்பாடி ஒரு எழுச்சியைப்பரவச்செய்து விட்டு அடுத்த ஊருக்கு பயணப்படுவார்கள்.மனுஷங்கடா நாங்க மனுஷங்கடா
ஒன்னைப்போல அவனைப்போல
எட்டுச்சாணு ஒசரமுள்ள மனுஷங்கடா
                                                                       - டேய் மனுஷங்கடா

ஒங்கதலைவர் பொறந்த நாளு போஸ்டர் ஒட்டவும்
ஒங்க ஊர்வலத்துல தரும அடிய வாங்கிக்கட்டவும்
எங்க முதுகு நீங்க ஏறும் ஏணியாகவும்
நாங்க இருந்தபடியே இருக்கணுமா காலம் பூராவும்
                                                                      - டேய் மனுஷங்கடா

எங்களோட மானம் என்ன தெருவுல கெடக்கா
ஒங்க இழுப்புக்கெல்லாம் பணியறதே எங்களின் கணக்கா
ஒங்களோட முதுகுக்கெல்லாம் இரும்புல தோலா
நாங்க வீடு புகுந்தா ஒங்க மானம் கிழிஞ்சி போகாதா
                                                                    - டேய் மனுஷங்கடா

சதையும் எலும்பும் நீங்க வச்ச தீயில் வேகுது
ஒங்க சர்க்காரும் கோர்ட்டும் அதுல எண்ணய ஊத்துது
எதை எதையோ சலுகையின்னு அறிவிக்கிறீங்க
நாங்க எரியும் போது எவன் மசுர புடுங்கப்போனீங்க
                                                                     - டேய் மனுஷங்கடா

4 comments:

Anonymous said...

குதிரை வண்டி ஸ்டாண்ட்-ல்
கழுதை கட்டவும் முடியுமோ
அய்யா பெருவழுதி அங்கே
அற்றைத் திங்களில் குதிரைவண்டி ஸ்டாண்ட் பாங்க்ஒன்று திவாலாகி
ஷோரூம் ப்ரான்ச் ஆனதறிவிரா ?
காந்தி உப்புக் காய்சினாலும் கு.ஸ்டாண்டில்நெய் விற்கும் அவலமங்கே !அல்லவோ ?
சின்ன ஹோட்டால் இல்லா
ஸ்டாண்டு என்று தான் நிலைத்திருக்கும்.

ஸ்டாண்டு நிலைக்க டீக்கடை
வேண்டும் நின்று ரசிக்க பெட்டிக்
கடை வேண்டும் இல்லாவிட்டால்
குதிரைகள் ஓடிவிடும் சாரல்மழையில்
குதிரைகள் தூங்குவதில்லை

சித்துகள் புரியாத சின்ன
குதிரைகள் வெத்து நிலவரம்
அறியுமோ அற்புதமோ

கப்புகள் இல்லா ரேசில் ஒடிடும்
குதிரைக்கு கொல்லு கிடைக்குமா
குத்துப்பாட்டுக்கு குதிரைகள்
ஆடுமா சொல்லுங்கள் தமிழர்களே

Anonymous said...

வணக்கம் உறவே உங்கள் வலைத்தளத்தினை இங்கேயும் இணையுங்கள்....

http://meenakam.com/topsites


http://meenagam.org

திலிப் நாராயணன் said...

திரு அனானி!
//ஸ்டாண்டு நிலைக்க டீக்கடை
வேண்டும் நின்று ரசிக்க பெட்டிக்
கடை வேண்டும் இல்லாவிட்டால்
குதிரைகள் ஓடிவிடும் சாரல்மழையில்
குதிரைகள் தூங்குவதில்லை//

குதிரையைப்பற்றிய ஒரு அருமையான கவிதையைப்படிக்கத்தந்தீர்கள். நன்றி! அப்போது வந்த ஹோட்டல் சன்னா அருகே அந்த குதிரை வண்டி ஸ்டாண்டு இன்றைக்கு இல்லை என்றே நினைக்கிறேன். பெயர் மட்டும் நிற்குமென்பது எனது கருத்து.

திலிப் நாராயணன் said...

திரு அனானி!
"மீனகம்" வலைக்குழுவில் எனது படைப்பை இன்று இணைத்து விட்டேன். தொடர்ந்து இணைக்கிறேன் வரும் படைப்புகளையும்.