வலைப்பதிவில் தேட...

Friday, August 12, 2011

எனக்குரிய இடம் எங்கே?

பேரா. ச மாடசாமி தொடராக"புதிய ஆசிரியன் " மாத இதழில் விவாதித்த, பகிர்ந்த அனுபவங்களைத் தொடராக எழுதியதன் மொத்தத்தொகுப்பு "எனக்குரிய இடம் எங்கே"? என்ற புத்தகம். மிகச்சிறந்த கல்வியாளர் ஒருவரின் தொகுப்பாக வெளி வந்திருக்கிறது. அதில் அவர் விவாதிக்க முன் வைத்த விஷயங்களை வைத்து வெகுவாக கடிதங்கள் வந்திருந்தன புதிய ஆசிரியனுக்கு. அப்போது நான் குஜராத் மா நிலம் கோத்ராவில் பணிபுரிந்து கொண்டிருந்தேன்.

பேரா ராஜு அவர்கள்தான் புதிய ஆசிரியனின் ஆசிரியர்.  அவர் இயற்பியல் பேராசிரியராக விருது நகர் செந்திக்குமார நாடார் கல்லூரியில் பணியாற்றிக்கொண்டிருந்த போது வேலை நீக்கம் செய்யப்பட்டார். அதுவரை வருடா வருடம் ஐயப்பன் கோவிலுக்கு மாலைபோட்டு இரு முடி கட்டி சென்று கொண்டிருந்தவர் அவர். நான் புகுமுக வகுப்பு (1976-77) படிக்கும் போது கல்லூரி நிர்வாகம் இடை நீக்கம் செய்து விட்டது. நாங்கள் கல்லூரிக்குள் செல்லும் போதெல்லாம் வாசலில்" மூட்டா" அமைப்பின் சார்பில் ஆர்ப்பாட்டம் நடக்கும்.

பேரா ராஜுவை திரும்பவும் பணியிலமர்த்தக்கோரி சாத்வீக வழியிலான போராட்டங்கள் அனைத்தும் நடந்து கொண்டிருந்தது. மாணவர்களும் கூட வேலை நிறுத்தம் என்ற நேரடி நடவடிக்கை போராட்டத்தில் கலந்து கொண்டார்கள். அப்போதெல்லாம் நான் இது போன்ற போராட்டங்களில் கலந்து கொண்டது இல்லை. அப்புராணி கடைக்கோடி மாணவன்.

பேரா ச மாடசாமி அவ்ர்களுக்கு நானும் ஒரு கடிதம் எழுதியிருந்தேன் (2002) வலைப்பூவில் பின்னூட்டம் போல புதிய ஆசிரியன் இதழில் பிரசுரம் ஆனது.
புத்தகமாக அவரது பிரசுரமான பகுதிகளைப்பதிப்பிக்கும்போது மிகவும் அசைவை ஏற்பத்தியதாக அந்தக்கடிதத்தை தனது புத்தகத்தில் ஒரு பக்கத்தில் வெளியிட்டார்.

அந்தப்புத்தகத்தை விமரிசனமாக bank workers unity என்ற வங்கி ஊழியர் சங்கப்பத்திரிகையில் எழுதும் போது ( ஜூன் 2008 ) எனது கடிதத்தை அப்படியே பிரசுரம் செய்திருந்தார்கள்.

தோழர் தமிழ்செல்வன் அவர்களின் மகனின் திருமணத்திற்கு கோவில்பட்டி சென்ற சமயம் தோழர் எஸ். வி. வேணுகோபால் அவர்களை சந்திக்க நேர்ந்தது. பாப்பம்பாடி ஜமாவின் ஆட்டத்தோடு கூட அந்தக்கல்யாண விழாவில் ( நாதஸ்வரம், தவில் இல்லாத) அவர் அவர்களது வங்கி இதழில் வெளியிட்டதைக்குறிப்பிட்டார். சென்னை சென்று பிரசுரமான அந்தப்பக்கத்தை எனக்கு ஒளி அச்சில் அனுப்பி வைத்தார். அதன் நகல் கீழே:

உழைக்கும் பகுதி மாணவர்கள் என்றொரு பகுதி இருந்து கொண்டேதான் இருக்கிறார்கள். அமைப்பு ரீதியாகத்திரட்டப்பட்ட தொழிற்சங்கங்கள் இது போன்ற உழைக்கும் மாணவர்கள் விஷயத்தில் தலையீடு செய்தல் நலம்.

தவிரவும் தங்களது வேலையைப்பாதுகாத்துக்கொள்ள, பதவி உயர்வு, சம்பள நிலைப்பு(தொடர்ந்து ஏறி வரும் விலைவாசிக்கொப்ப), பஞ்சப்படி, போனஸ், இருக்கும் இலாகா சார்ந்த சலுகைகள் என தங்களைத்தக்கவைப்பதே அமைப்பு சார்ந்த தொழிலாளர் சங்கங்களின் பிரதான வேலை என்றாகிப்போனது.

1990 இல் பேரா மாடசாமியும் நானும் எழுத்த்றிவு இயக்கம் , அறிவொளி இயக்கம் என்று வேலை செய்யத்துவங்கிய காலங்களில் அவர் குறிப்பிடுவார். தொழிற்சங்க வேலை செய்தால் சம்பள உயர்வு, போனஸ், என்று பொருளாதாரக்கோரிக்கைகள் மட்டும்தான் தெரியும் வாருங்கள் கிராமத்துக்கு அந்த வஞ்சகமில்லாத உழைப்பாளிகளைப்பாருங்கள். உங்கள் உள்ளம் உவக்கும்.

ஆம். வெள்ளையுள்ளம் கொண்ட வெள்ளந்தி மனிதர்கள், மனுஷிகள், குழந்தைகள் அனைவரும் எங்களை அரவணைத்துக்கொண்டாடினார்கள். எந்த நேரம் அவர்கள் இருக்கும் இடம் தேடிப்போனாலும் சரி அன்புதான் நெஞ்சு நிறை அன்புதான் மேல்சட்டை இராது ஆனால் அவர்கள் பேச்சில் மேற்பூச்சு நிச்சயமிராது.

அவர்களோடு நாங்களும் எங்களோடு அவர்களும் மனதளவில் ஒட்டி உறவாடி கற்று, எங்களையும் கற்க வைத்து ( தங்களின் அனுபவங்களோடு) என அது ஒரு பொற்காலம்.

நாங்கள் நடந்து திரிந்தோம் பாட்டோடும், புத்தகங்களோடும், சொலவடைகளோடும், விடுகதைகளோடும் அறிவியல் பரப்பும் ஆர்வத்தோடும் புழுதி படிந்த கால்களோடும் ...

7 comments:

kashyapan said...

திலீப் நரயணன் அவர்களே! பெராசிரியர் என்று சிறுகதை எழுதியிருந்தேன் எஸ் .எம் என்பதற்குப் பதிலாக எம்.எஸ்.என்று பெராசிரியர் பெயரைக் குறிப்பிட்டிருந்தேன். அதனை ஜூலை மாதம் மறு பதிவு செய்துள்ளேன் .அதில் வரும் பாத்திரங்கள் நீங்கள் சந்தித்தவர்கள். படியுங்களேன்.---காஸ்யபன்.

hariharan said...

கடிதம் படித்த போது மனம் கனத்தது.

பேரா.மாடசாமி அவர்களுடைய எழுத்து மிகவும் சாதாரணமாக இருக்கும். அவருடைய எழுத்தை வாசிக்கும்போது அவருடைய முகம் எப்படியிருக்கும் என்று யோசிப்பேன், அவரை ‘எனக்கு இல்லையா கல்வி’ என்ற ஆவணப்படத்தில் பார்த்த திருப்தி கிடைத்தது.

அழகிய நாட்கள் said...

திரு ரத்னவேல்!
காலச்சக்கரம் உருளுது என்பார் கலைமாமணி பாவலர் ஓம் முத்துமாரி. நிலைவலைகளின் காலச்சக்கரத்திலிருந்து மீள முடியாத நினைவுகள்தான் எனது பதிவுகள்.

அழகிய நாட்கள் said...

திரு காஸ்யபன்!
பேராசிரியர் சிறுகதை படித்தேன். கிட்டத்தட்ட எனது வாழ்வின் பகுதிகள் இருக்கிறது. எனது கடிதத்தில் குறிப்பிட்டது போல மாடு செத்தால் பள்ளிக்கூடம் போவதில் சுணக்கம் எனக்கு இருந்தது. பட்டம் முடித்து P&T யில் எழுத்தராக வந்த பிறகு 1990 இல் பள்ளத்தூர் கல்லூரியின் சாலை ஓர வகுப்புகளில் பேரா ராஜு மற்றும் பேரா மாடசாமி ஒருங்கிணைப்பில் கவிஞர் வைரமுத்து அன்றைய எம் எல் ஏ பாப்பா உமா நாத் இருவரை வரவழைத்து காரைக்குடியில் மிகப்பெரிய முத்தாய்ப்பு நிகழ்ச்சி நடத்தியிருக்கிறோம்.

அழகிய நாட்கள் said...

ஜென்னிமா என்ற பெயரில் ஒரு நாடகங்களின் தொகுப்பு பேரா ச மா அவர்களுடையது அதில் வரும்" கைகள் "நாடகத்தை நான் 92 இல் மதுரையில் தொலைத்தொடர்புத்துறை சார்பில் நடந்த கலாச்சார நிகழ்வில் அரங்கேற்றினேன். "பாம்பாட்டி சித்தர்" அவரது மற்றொரு புத்தகம். "பொதுவுடமை இலக்கியம்" என்ற செம்மலர் ஆய்வுப்புத்தகம் அவரது படைப்பு. இறுதியாக வெளியானது அறிவொளி நாட்களில் கற்போர்களிடமிருந்து தொகுத்த "சொலவடை"என்ற பெட்டகம். எனது கடிதம் வெளியாகியிருக்கிற "எனக்குரிய நாட்கள்" அவரது(அனைவருக்குமான) பள்ளியறை சிந்தனைகள்.

தமிழ்தாசன் said...

திலீப் நாராயணன் அவர்களே உங்கள் கடிதம் படித்தேன்.
அருமை தோழரே !!!
எல்லா உழைப்பாளி வர்க்கதிருக்கு பின்னும் ஒரு கதி இருக்கிறது தோழரே .
நானும் விடுமுறை நாட்களை வேளைக்கு சென்று களிதிருகிறேன்.
அந்த வலிதான் படிக்க தூண்டியது. செங்கல் இறக்குவேன். என்னக்கு கிடைத்த முதல் சம்பளம் 140 ரூபாய் .
அது தான் என்னை ஒரு கணினி வலுனரக்கியது.
"கைத்தொழில் ஒன்றைக்கற்றுக்கொள்
கவலை இல்லை இனி உனக்கு
ஒத்துக்கொள் - பாரதி தாசன்."
எதற்கு ஏற்ப ஓரளவு எல்லா தொழில்களையும் கற்றேன்.

அழகிய நாட்கள் said...

திரு தமிழ் தாசன் அவர்களே! ஏராளமான பேர் நம் வரிசையில் சாதனையாளராக இருக்கிறார்கள். "வாழும் வரலாறே" என்று அரசியல் வாதிகளுக்கு போஸ்டர் ஒட்டியதை நீங்கள் பார்த்திருக்கக்கூடும். உண்மையில் வரலாற்றுக்குச்சொந்தக்காரர்கள் சமூகத்தின் அடித்தட்டிலிருந்து வந்தவர்கள்தாம்
பிரியமுடன்,
திலிப் நாராயணன்.