வலைப்பதிவில் தேட...

Thursday, April 9, 2009

கோத்ரா நாட்கள் 1அப்படி ஒன்றும் அழகிய நாட்கள் இல்லைதான் . 2002 பிப் 27 துவங்கியது அந்த கலவரம் கரசேவைத்தொண்டர்கள் ராமசேவைத்தொண்டர்களாக மாறியிருந்தார்கள். ஆனால் கலவரம் மட்டும் அதேபாணிதான்.
அயோத்தியில் ஒரு கட்டிடத்தை இடித்தார்கள்.
இங்கே ஒரு எஸ் 8 என்ற எண்ணுள்ள சபர்மதி எக்ஸ்பிரஸ் வண்டியின் "கோச்"சை எரித்தார்கள்.

58 பேர்கள் எரிந்து கரிக்கட்டை ஆனார்கள். காலை8மணி சுமாருக்கு எனக்கு ஒரு தொ்லைபேசி வந்தது. அப்போதிலிருந்து கோத்ராவைப்பரபரப்பு தொற்றிக்கொண்டது. நடந்த விஷயம் இதுதான். ராமசேவைத்தொண்டர்கள் எனப்பட்டவர்கள் கோத்ராவுக்கு முன் தகோத் ஸ்டேஷனில் "சாயா"விற்ற தாடிக்கார சிறுபான்மையினரை வம்புக்கு இழுத்திருக்கிறார்கள் தாடி யையும்சேர்த்தேதான். கூடவே "ஜெய் ஷ்ரீராம்" கோஷமிடச்சொல்லி என ஆரம்பித்து அதே வேலை அடுத்த ரயில் நிலயமான கோத்ராவிலும் தொடர S6 என்ற இலக்கப்பெட்டி கொளுத்தப்பட்டது.

அடுத்த சில நாட்களில் நான் விடுமுறைக்கு தமிழகம் வரவேண்டியிருந்தது. கிட்டத்தட்ட அதையொட்டிய சம்பவம் ஒன்று வைகை எக்ஸ்ப்ரஸ் ரயிலில் ஒரு முஸ்லிம் குடும்பம் கோழி பிரியாணியும் கையுமாக அனைவரும் ஆசை ஆசையாக பிரித்து சாப்பிட ஆரம்பித்தார்கள். பக்கத்திலே ஒரு பிராமணக்குடும்பம். தயிர் சோறுசகிதம் அவர்கள் வேலையை ஆரம்பித்தார்கள்.
பிரச்னைஎன்னவென்றால் பொது இடத்திலே இப்படியா நான்வெஜ் சாப்பிடுவாங்க என்றார் தயிர்ச்சோறுக்கு சொந்தக்காரர்.
எனக்கு தாகோத்தில் ராமசேவகர்கள் செய்தது ஞாபகம் வந்து தொலைத்தது. 

தமிழகத்தின் தந்தை பெரியார் வைகையின் வேகத்தைவிடவும் என் நினைவில் வந்தார்.

1 comment:

காமராஜ் said...

எங்கள் அன்பான நாராயணனுக்கு வணக்கம்.
வலையுலகில் உங்கள் பிரவேசம் புதுப்புது
விளைவுகளை உண்டுபண்ணட்டும்.
இலக்கியமும் வரலாறும் புறவழிச்சாலையில்
பயணித்த இடங்களுக்குள் புகுந்து மறுவாசிப்பு
நடத்த வேண்டும் வருக.