வலைப்பதிவில் தேட...

Friday, December 13, 2013

பிராமணமயமாதல் தவிர்க்கவே முடியாத ஒன்றா?

மனுதர்மத்தின் படி படைக்கும் கடவுளான பிரம்மனின் முகத்தினின்றும் பிராமணன்(வேதம் சொல்லுபவன்), தோளினின்றும் சத்திரியன் (அரசாட்சி செய்பவன்) தொடையினின்றும் சூத்திரன்( உடல் உழைப்பாளர்கள்) என்று படைக்கப்பட்டதாகக்கூறுகிறார்கள். இந்தக்கதையெல்லாம் இந்தியா என்ற தேசத்தை மட்டுமே அடிப்படையாகக்கொண்டது. வெளி நாடுகளுக்கெல்லாம் செல்லுபடி ஆகாது. நிற்க...
   
இந்திய நாட்டு ஜனத்தொகையில்  நாலில் ஒருபகுதி மக்கள் பஞ்சமர்களாக/ சண்டாளர்களாக அறியப்படுகிறார்கள். வெட்டியான் என்று கூட இவர்கள் அனைவரையும் கூற முடியும் மனுவால். இவர்கள் வேலை இதுதான் என வரையறுக்கப்படவில்லை. அவனைப்போல வேதம் மட்டும் சொல்லி உடல் வளர்க்க இவனுக்கு விதிக்கவில்லை. எனவே வெட்டியானாக ஆக்கப்பட்டான் அல்லது விளிக்கப்பட்டான்.

உண்மையில் பார்க்கப்போனால் உழைக்காமல் வெட்டியாக உட்கார்ந்து சாப்பிட்டுக்கொண்டு அனைவருக்கும் இலவசமாக அல்ல; காசு வாங்கிக்கொண்டு வேதங்களை அவர்கள் புரியாத மொழியில  (சத்திரியர், வைஸ்யர் மற்றும் சூத்திரர்கள் தான்) சொல்லி காசு அரிசி  பருப்பு உயிருள்ள மாடு கன்று என வாங்கி பிழைக்கும்  ஒருவர் தான் வெட்டியான் உண்மையில்.

அறிவியல் ரீதியாகப்பார்த்தால் உண்மையில் ஒரு ஆண் ஒரு பெண் சேர்ந்து கலவி செய்தால்தான் குழந்தைகள் பிறக்கின்றன. ஆதாம் யாவாள் கதையில் கூட யாவாள் சாப்பிடக்கூடாத கனியை உண்டதால் பாவியாகி மனுஷரை ஈன்றெடுத்து உலகுக்கு சமர்ப்பிக்கிறாள். எனவே எல்லோரும் பாவியாகிப்போனோம்.

சரி ஒருவர் பிறப்பால் தலித் என்று கொள்வோம். கல்வி மறுக்கப்பட்ட சமூகம் இயல்பாகவே. காலப்போக்கில் இவர் கல்வி கற்று அரசு வேலைக்கு வந்திருக்க முடிகிறது. வருடங்கள் ஆகிறது ஒரு பத்துப்பதினைந்து வருடங்கள் சேவை முடித்தவுடன் ஒரு சிறிய இடமாக பார்த்து வாங்குகிறார்
அப்புறம் அங்கே ஒரு வீட்டைக்கட்டுகிறார்.அவரது குல வழியான விழா என்று சொன்னால் தனது சுற்றத்தாரை அழைத்து மாடு ஒன்றை அடித்து விமரிசையாக புது மனைபுகுவிழா கொண்டாடவேண்டும். இதுதான் அவருக்கு நல்லது.தன்னை உலகுக்கு அடையாளப்படுத்தவும் உதவும்.

நடப்பில் நிலைமை அப்படி இல்லை தான் இன்ன சாதி என்று கூற முடியாத நிலைமையில் அவர் இருக்கிறார். எனவே பிராமண மயமாக (SANSCRITISATION) எத்தனிக்கிறார்.

விளைவாக கணபதி ஹோமம் செய்ய ஐயரைத்தேடுகிறார். ஒரு பத்தாயிரம் ரூபாய் அவருக்கு காணிக்கை கொடுக்கிறார். இரவெல்லாம் புகையைப்போட்டு மந்திரம் சொல்லி வீடு கட்டிய தம்பதியினரை காலை நாலுமணிமுதல் சாத்திரங்கள் சொல்லி ஒரு பசுமாட்டையும் கன்றையும் கொண்டுவந்து புது  வீட்டுக்குள் விட்டு அது மூத்திரம் பெய்தால் யோகம். மாடு கிடைக்கவில்லையென்றால் அதன் மூத்திரத்தைக்கொண்டு மூலை மூலைக்கு தெளித்து, வாங்கி வரச்சொன்ன அத்தனை தேங்காய் அரிசி பலசரக்கு பலகாரம் எல்லத்தையும் அள்ளிக்கொண்டு போய் விடுகிறார் பணத்தையும் வாங்கிக்கொண்டு...

சமீபத்தில் ஒரு கிரகப்பிரவேச வீடு. கணபதி ஹோமம் ஐயர் மாடு கோமியம் எல்லாம் ஆயிற்று. காலை சிற்றுண்டி, மதியம் மரக்கறி சாப்பாடு இரவு டிபன் முடிந்தது.

மறு நாள் கறி சாப்பாடு போடவேண்டும் அல்லவா.  ஒரு ஐந்து கிலோ ஆட்டுக்கறியும் இரண்டு கிலோ கோழிக்கறியும் எடுக்க புது வீட்டைக்கட்டிய தம்பியும் எனது மருமகளும் சொன்னார்கள்.  நாம் எல்லோரும் சின்ன வயசிலிருந்து மாட்டுக்கறி சாப்பிட்டுப்பழகியவர்கள். எதற்கு ஆட்டுக்கறிஎல்லாம் என்று சொல்லிவிட்டு மாட்டுக்கறி அந்த ஊரில் எங்கே கிடைக்கும் என்று எனது  நண்பரிடம்  போனில் கேட்டு  அங்கே போய் ஒரு பத்து கிலோ மாட்டுக்கறி எடுத்து வந்தேன்..
அப்புறம் சாவகாசமாக கறிக்குழம்பு வைத்து கொஞ்சம் சுக்காவறுவல்  என சமையல் ஆனது. மாட்டுக்கறி சாப்பிடாதவர்களுக்கு ஒரு இரண்டு கிலோ கோழிக்கறி குழம்பு ஆனது. கறிக்குழம்பு புது வீட்டில் மணம் வீசி ஆகிக்கொண்டிருந்த நேரம் ஐயர் வந்தார். அந்த செங்கலால் கட்டிய ஹோமத்தைக்கலைத்துக்கொண்டே ஒரு டீ கேட்டார்.

வந்திருந்த உறவு முறை அனைவரும் மனதார சாப்பிட்டு பிரிந்து அவரவர் ஊர் சென்றோம்...6 comments:

Somasundaram Hariharan said...

சமீபத்தில் எனது மாமனார் காலமானார், ்காரியம் செய்யும் நாளில் ஐயர் வரவழைக்கப்பட்டார், அவருடன் நாவிதரும் வந்திருந்தார். வேலையெல்லாம் முடிந்து நாவிதர் சம்பளமாக 500 ரூபாய் கேட்டார், கொடுப்பதற்கு ஒருவர் பேரம் பேசிக்கொண்டிருந்தார், என்னுடைய கடையை இன்று நாள் முழுதும் மூடிவைத்திருக்கிறேன், அதனால் என்னுடைய கூலி இவ்வளாவுதான் என்றார். முடிவக கொடுத்துவிட்டார். ஐயர் புனிதப்படுத்தும் காரியத்தை செய்துகொண்டிருந்தார், அவர் சொன்ன மந்திரங்கள் எல்லோருக்கும் தெரிந்த சில சம்ஸ்கிருத வரிகள் மட்டும் ம்ற்றவையெல்லாம் ஆண்டாள் பாடிய திருப்பாவை, அவருடைய கூலியை நாசூக்காக தட்டில் 501 வையுங்கொ! என்றார்! எனக்கு சுர்ர் என்றது.. இன்னும் அடுத்தடுத்து 101, 51, என்று வங்கிக்கொண்டேயிருந்தார். கடைசியில் அன்றைய வரவு சுமார் 1000த்தை தாண்டியது, யாரும் மறுக்காமல் கொடுத்ததுதான் செய்தி!

Arjunan Narayanan said...

நம்மை கோவிலுக்குள் நுழைய அனுமதிக்காத மனுவாதிகளான சனாதனவாதிகளான ஐயரை ஏன் நமது வீட்டு விழாக்களுக்கு அழைக்க வேண்டும். அவர்கள் கேட்கும் தட்சனையை ஏன் வழங்க வேண்டும். அவரால் நம்மை சொர்க்கத்துக்கா அழைத்து செல்ல முடியும். கர்ப்பக்கிரகத்துக்குள் கூட அனுமதிக்க மாட்டார்.

ganesan said...

முடியும் முடியாதது எதுவும் இல்லை.எதுவும் இல்லை .எனது மகளின் திருமணம் காதல் திருமணம் பட்டியலினத்துக்குள்ளே சாதிமறுப்பு ஜீ வீரபாண்டியன் ஐ ஏ எஸ் முன்னிலையில் எழுத்தாளர் தமிழ்ச்செல்வன்தான் நடத்தி வைத்தார் நாகர்கோவில் களரி கலைக்குழுவினர் தானாக முன்வந்து பறையாட்டம் உட்பட கிராமியநடனங்கள்,கரிசல் கிருஷணசாமி கருணாநிதி மக்கள் பாடல்கள். வீ பொன்னுராஜ்,பொன்னீலன் கனியமுதன் ஏவி பெல்லார்மின் வாழ்த்துரையுடம் இருவரும் ஒருவர் மாறி ஒருவருக்கு தலையில் ஓங்கி கொட்டு அம்பேத்கர் பெரியார் நூல்கள் மணமகன் மணமகன் ஜென்னி நிவேதிதா ஜெகதீஷ் இருவரும் மாற்றிக்கொண்டார்கள்.தாலியை ஒருபெரியவர் எடுத்துக்கொடுக்க இனிதே திருமணம் நெல்லை முஸ்லிம் நண்பர்கள் செய்த இறைச்சி பிரியாணி வந்திருந்த அனைவரும் சிந்தனை மகிழ்ச்சி அடைந்தனர்.தனது வாழ்நாளில் இப்படியொரு திருமணம் பார்த்தது இல்லை என் பொன்னீலம் பதிவு செய்து வாழ்த்தினார்.மக்கள் மாற்றத்தை விரும்புகின்றார்கள் ஆரம்பிக்க தயக்கம். பலர் செய்யும்போது பிராமணியத்தை ஓரங்கட்ட பௌதீக சக்தியாக மாறும்.

Anonymous said...

I think the admin of this web page () is really working hard for his web site, because here every material is quality based
data.

Arjunan Narayanan said...

Thank you Mr anony.

நா.முத்துநிலவன் said...

அய்யா வணக்கமுங்க. நல்லா இருக்கியளா? தமிழ்மணத்துல வித்தியாசமான தலைப்பா இருக்கேனு பா்த்துக் கட்டுரையைப் படிக்க வந்தா, பார்த்த முகமா இருந்திச்சா... உடனே பின்தொடர்பட்டனை அமுத்திட்டேன். என் வலைப்பக்க நண்பர்களின் வலைப்பக்கப்பட்டியலிலும் இணைச்சுட்டேன். கர்நாடகாவுக்கு எப்ப போனீங்கய்யா?