வலைப்பதிவில் தேட...

Monday, June 24, 2013

ஆண்கள் சமைத்தல் அதனினும் இனிது.

தோழர்  ச.தமிழ்செல்வன் எழுதிய" ஆண்கள் சமைத்தல் அதனினும் இனிது"  என்ற புத்தகம் பாரதி புத்தகாலயத்தின் சார்பில்  கடந்த ஐந்தாறு ஆண்டுகளுக்கு முன்பு வெளியானது. சமையல் குறிப்பு போல சில வகை சாதங்கள் குழம்புகள் செய்முறை போலத்தான் அப்புத்தகம் இருக்கும். ஆனாலும் ஒரு விஷயத்தை உரக்கச்சொல்லும்... அது இதுதான். காதலிப்பதற்கு ஏற்ற இடம் சமயலறை மட்டுமே என்பதுதான் அது.

காதலிக்க ஏற்ற இடம் பார்க் ,பீச், தியேட்டெர் என்றெல்லாம் அலைய வேண்டாம் சமயலறை மட்டுமே போதுமானது என்கிறார் அவர். சமயலறையில் கலக்கப்படும் சமையல் பொருட்கள் அது கிளப்பும் புதிய வாசனை  என சமையலறை  நமக்குக்காட்டும்  ஒரு அறிவியல்  அது ஒரு சரிவிகித அறிவியல். பெண்கள்மட்டுமே சமையல் வேலை செய்ய வேண்டும் ஆண்கள் அதன் சுவையை மட்டுமே தெரிவிக்க வேண்டும் அவர் மனதில் இவர் நீங்காது இடம் பெற வேண்டும் போன்ற கல் தோன்றி மண் தோன்றாக் காலத்து சிந்தனைகளை சிதறடிக்கும் புத்தகம் அது.

உலகில் சரிபாதி பெண்கள். அவர்கள் இல்லாமல் எந்தவித புரட்சியையும் நடத்தி விட முடியாது என்பார் லெனின்.அவரே பிரிதொரு இடத்தில்  நச்சரிக்கும் வீட்டு வேலைகளிலிருந்து பெண்களை விடுதலை செய்யாமல் நாம் அடுத்த கட்டத்தை நோக்கிப்பயணிக்க முடியாது என்றுகுறிப்பிடுகிறார்.

நேற்று 23/06/2013 அன்று  சமையலறையில் ஆர்வமடைந்தவர்கள்  சோர்ந்து போனவர்கள் என்று இரு சாரார் சங்கமிக்க கோபி நாத் அவர்கள் நடத்திய விஜய் டிவியி நீயா நான நிகழ்வில் தோழர் தமிழ்செல்வன் பங்கேற்றார். ஆண்கள் சமைத்தல் அதனினும் இனிது என்ற புத்தகத்தை கையில் வைத்திருந்தார் நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர் திரு. கோபி நாத்.

அகில இந்திய அளவில் பணியாற்றும் என்னைப் போன்றவர்கள் குஜராத்திலும் சரி இப்போது கன்னட தேசத்திலும் சரி( பெல்லாரி)  சமையல் என்பதை ஒரு ஆர்வமான அவசியமான விஷயமாகப்பார்க்கிறோம். இரண்டரை ஆண்டுகாலம் கோத்ராவிலும் (அப்போதுதான் நரவேட்டை நடத்தினார் நரேந்திர மோடி) இப்போதும் கிட்டத்தட்ட ஒரு வருடகாலமாக சுய சமையல் செய்யும் ஒருவன் நான்.





என் தோழர் திரு ராதாகிருஷ்ணன் மும்பையில் பணியாற்றிய நேரம் (2008)   நானும் நண்பர்கள் இருவரும் சென்றிருந்தோம். அப்போது அவரும் அவருடன் பணியாற்றும் திரு சங்கர குமார் இருவரும் தங்கள் கைப்படவே எங்களுக்கு சமைத்து ப்பறிமாறினர். அப்போது அவர் ஒரு விஷயத்தைக்குறிப்பிட்டார். எல்லா ஆண்களும் சமைக்க வேண்டும். அப்போதுதான் பெண்கள் படும் கஷ்டம் என்னவென்று புரியும் என்றார்...

கற்பென்று சொன்னால் அது இருபாலர்க்கும் பொதுவில் வைப்போம் என்றார் பாரதியார். சமையல் என்று சொன்னாலும் கூட அது இருபாலருக்கும் உகந்ததாக இருக்கட்டும் என்பது தான் இன்றை தினத்தேவை.. வேலைக்குப்போவதும் போகாததும் இதில் கணக்கில்லை...

4 comments:

indrayavanam.blogspot.com said...

சமையல் குறித்து மிக அருமையான தகவல்

அழகிய நாட்கள் said...

நன்றி தங்கள் வருகைக்கும் கருத்துரைக்கும்...

வருண் said...

***அப்போது அவர் ஒரு விஷயத்தைக்குறிப்பிட்டார். எல்லா ஆண்களும் சமைக்க வேண்டும். அப்போதுதான் பெண்கள் படும் கஷ்டம் என்னவென்று புரியும் என்றார்...***

எங்கம்மாலாம் அருமையா சமைப்பாங்க, சார். அவங்க அதை கஷ்டமாக ஒரு போது சொன்னதில்லை! அதை கஷ்டமாகப் பார்த்தால்தான் அவங்க கஷ்டப்படுவாங்க.

சமையலை ரசித்து செய்றவங்க, சமையல் கலையில் நான் ராணி என்று பெருமிதம் அடையும் பெண்களுக்கு தமிழ்செல்வனின் புத்தகமோ அல்லது அறிவுரையோ தேவை இல்லாதது. தாமோதரன் குக் புக்தான் உதவும் அவர்களுக்கு!

அழகிய நாட்கள் said...

அம்மாவின் சமையலை யாருமே குறை சொல்ல இயலாது...வீடுகளில் நான் தான் சமையல் ராணி என்று பெண்கள் சொல்லிக்கொள்ளலாம். ஆனால் வெளியே ஹோட்டல் கல்யாண வீடுகளில் ஆண்கள்தானே சமைக்கிறார்கள். அவர்கள் சமையல் ராஜா என்று சொல்லிக்கொள்ளுவது எப்படி சரியாகும்.