வலைப்பதிவில் தேட...

Thursday, December 16, 2010

சைவமும் அசைவமும்

காரைக்குடி நண்பர் சித்திரவேலு (முன்னாள் இந்தியன் வங்கி ஊழியர்)தற்போது கேஸ் ஏஜென்சி, பெட்ரோல் பங்க், பஸ் போன்ற நிறுவனங்களின் தலைவர். அவரது பையன் காமேஷுக்கும்  மருத்துவர் பாண்டியன் அவர்களின் மகள் மாள்விகாவுக்கும் திருமண வரவேற்பு நிகழ்ச்சி. 15/12/2010 அன்று நானும் எனது மனைவியும் சென்றிருந்தோம்.

எங்களது திருமண வரவேற்பும் கூட இதே நாளில் ஹோட்டல் சுகம் இன்டர் நேஷனல் வரவேற்பரையில் நடந்தது தோழர் ஈரோடு ராஜு தலைமை மூட்டா கணபதி வாழ்த்துரை. இன்னும் FNTO சங்கப்பிரதி நிதியாக நார்மன். NFTE  செயலர் வெங்கடேசன், கேசவன், சுப்ரமணியன், ராதாகிருஷ்ணன் அவரது மனைவி மாதர் சங்கத்தின் கமலா NFPE சார்பில் அழகு BTTU   சார்பில் ராஜு, ராஜகோபால், DYFI சார்பில் பாக்கியராஜ் மற்றும் பலர் பங்கேற்று சிறப்பித்தனர். வங்கி ஊழியர் சார்பில் கலந்து கொண்டவர்களில் முக்கியமானவர் தோழர் சித்திரவேலு. அவரது மகனின் திருமண வரவேற்புதான் நான் குறிப்பிட வந்தது.

வரவேற்பு பகுதியில் கல்கண்டு சந்தனம் மற்றும் மலர்களுடன் மாதர் சங்கத்தி்ன் தோழர் கமலாவும் அவரது கணவரும்  ராதாவும்  சிரித்த முகத்துடன் வரவேற்றனர்.

நானும் மனைவியும் அங்கு சென்றதன் அடிப்படை காரைக்குடியை விட்டு வந்து இருபது ஆண்டுகள் நகர்ந்து விட்டன.  இருந்த போதிலும் விட்ட குறை தொட்ட குறையென
தொழிற்சங்க நண்பர்கள்,
தொலைத்தொடர்புத்துறை  நண்பர்கள்,
கல்லூரிபபேராசிரியர்
முதல் ரிக்ஷாக்காரர் வரையான ஒரு இழையோடிய உறவுகளின் முகத்தைப்பார்க்கவும் அவர்களின் மனதின் பகிர்வுக்காகவும்  ஒரு ரவுண்டு பார்த்து பேசிவிட்டு (அளவளாவி விட்டு என்று கொள்க)  வந்து விடலாம் என்றுதான் இந்தப்பயணம் அமைந்தது.

காலை எட்டரை மணிக்கு மாட்டுத்தாவணி பஸ் நிலையத்தில் ஹோட்டல் மெரினாவில் டிஃபன் சாப்பிட உட்கார்ந்த போதே எதிர்ப்பட்டவர் தோழர் எம் என் எஸ் வெங்கட்டராமன். தூரத்தில் இருந்த தோழர் எஸ் ஏ பெருமாள் (தோழர் எஸ் ஏ பி தான் எனது திருமணத்தை 10/12/1986 அன்று விருது நகர் சிமினி நந்தவனத்தில் தலைமை தாங்கி நடத்தி வைத்தவர் என்பது ஒரு முக்கிய விஷயம்).

கல்யாண வரவேற்பில் கோட்டையூர் மெல்லிசைக்கச்சேரி விமரிசையாக நடந்து கொண்டிருந்தது.

பேராசிரியை ஆவுடையம்மாள், சி பி ஐ கட்சியின் பி எல் ராமச்சந்திரன், மாதா ஜுவல்லர்ஸ் பரஞ்சோதி, வங்கி மாரியப்பன், பத்து என்கிற பத்மனாபன். போஸ்டல் அழகு, அண்ணன் வீரமாகாளி, மோகன் தாஸ்,    ராதாகிருஷ்ணன், வீ. கே பரமசிவன், பாலு, பூமி, சுப்பிரமணியன்,  ரகுபதி ( சயின்டிஸ்ட்) என்று ஒரு பெரிய பட்டியலின்  நண்பர்களைச்சந்தித்தோம்.

காரைக்குடிப்பக்கம்  விருந்து என்றால் அது செட்டி  நாடு சமையல்விருந்துதான். கல்யாண  வீடுகளில் பெரும்பாலும் நான்-வெஜ் உணவுதான் இருக்கும்.
வெஜ்  என்றால் கூட்டம் குறையும். 
குறிப்பாக வெஜ்-ஐ விடவும்
நான்-வெஜ்  மிகவும் பிரமாதமாக இருக்கும்.கோழி, மீன், ராட்டு, நண்டு, எலும்பு சூப்,  நுரையீரல் கூட்டு, முட்டை, மட்டன் சுக்கா கோலா உருண்டை இஞ்சித்துவையல் இன்னும் இது போல...

மண்டபத்தில் சாப்பிட இருபகுதியாகப்பிரித்திருந்தார்கள். ஒன்று சைவம் மற்றொன்று அசைவம. நல்லவேளையாக வைணவ சமையல் என்று எதுவும் இல்லை.

நியாயப்படி பார்த்தால் மரக்கறி உணவு என்றும் புலால் உணவு என்றும் இருந்திருக்க வேண்டும் அதுதான் முறைமை. வழமை பண்பாடு என்று கொள்ள முடியும்.  சைவம் என்று சொல்லுகிறபொழுதில் அதைத்தான் தழுவி சென்று கொண்டிருக்கிறோமா என்று நினைக்கக்கூட நேரம் இல்லாதவர்கள் விரும்பி சாப்பிடுவது புலால் உணவைத்தான்.

புத்தர் தோன்றியதற்கு முன்பிலிருந்து ஆரியர்கள் கூட ஆடு மாடு மேய்த்து வந்த காரணத்தால் அதன் புலாலையே உண்டிருக்கிறார்கள்.  கொல்லாமையென்பதே இப்படிப்பட்ட பழக்க வழக்கத்தை எதிர்த்து உருவானதுதான்.  அதன் பிறகு ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு ஆதி சங்கரர் சைவத்தை வளர்க்க முற்பட்ட நேரத்தில் தான் இராமானுஜர் வைணவத்தை வளர்த்தெடுத்திருக்கிறார். தீண்டாதவரை இவர் அழைத்தது "திருக்குலத்தார்" என்று மரியாதையாக.

காலப்போக்கில் வைணவம் சைவம் இரண்டும் "இந்து" என்கிற பந்தமாகிப்போனதோ? என்னவோ தெரியவில்லை...
புத்தம் சீக்கியம் ஜைனம் எல்லாமே சைவத்தின் கிளையாகிப்போனதோ? பதிலில்லை...
உணவிலும் கூட சைவம் பெரிதென்று ஆகிப்போனதன் விளைவு மாற்றுச் சொல்லாடலாக அசைவம் என்று உருவெடுத்து விட்டதோ என்னவோ!

4 comments:

ராத்திரியில் விழித்தவன் said...

இந்த மாதிரி சக்கை அறுவைகளை உங்கள் கூட்டம் மட்டும் பார்கிற மாதிரி வைத்தால் என்ன சார் ? எதற்காக தமிழ் மணத்தில் இனைத்து எங்கள் நேரம் பொழுதை வீனடிக்கிறீர்கள்.

தனிப்பட்ட முறையில் உங்களிடம் எனகென்ன கோபம். அறுவை தாங்காதது தான் மேட்டர்

அழகிய நாட்கள் said...

திரு ராத்திரியில் விழித்தவன் !

எனது பதிவை நீங்கள் படித்து விட்டு தாங்க முடியாமல் எழுதியதை வெளியிட்டு இருக்கிறேன். எனக்குப்பட்டதை நான் எழுதினேன் அவ்வளவுதான். இதைத்தான் எழுத வேண்டும் இப்படித்தான் பதிவுலகம் இருக்கவேண்டும் என்று யாரும் யாரையும் ஆணையிட முடியாது என்று நினைக்கிறேன். உங்களது பின்னூட்டத்திற்கு எனது நன்றி !

hariharan said...

மரக்கறி சாப்பிடுகிறவர்கள் ஏதோ உயர்ந்தவர்கள் போன்ற சிந்தனை நிலவுகிறது, இது பார்ப்பனீயத்திலிருந்து பெறப்பட்டவை தானே. எதிர்மறையான பொருட்களுக்கு ‘அ’ சேர்க்கப்படுவது போல அசைவம் என்ற சொல்லை பயன்படுத்துகிறார்கள். சுத்தம்-அசுத்தம் மாதிரி அசைவமும் அணுகக்கூடாத ஒன்றைப்போல்.

அனுபவத்தோடு பகிர்ந்துள்ளீர்கள். நன்று!

அழகிய நாட்கள் said...

திரு ஹரிஹரன்!

நன்றி தங்களது வருகைக்கும் பின்னூட்டத்திற்கும்!
தொடர்ந்து பேசுவோம் யோசிப்போம்.
வாழ்த்துக்கள்!