கல்கி வார இதழுக்கு ஜுன் 11 2002 எழுதிய ஒரு கடிதம் இது
பிரசுரிக்கப்பட்ட விபரம் தெரியவில்லை.
அன்புள்ள ஆசிரியருக்கு,
வணக்கம்.
தங்களது கேள்வி பதில் ( கல்கி ஜுன் 09 2002) பகுதியில் அரசுடமையக்கக்ப்பட்ட வங்கிகள் தனியார் மயமாக்கப்படுவதற்கு தொழிற்சங்கங்கள் எதிர்ப்பு தெரிவிப்பது ஏன் என்பதற்கான காரணங்களாக தாங்கள் சிலவற்றைக்குறிப்பிட்டிருக்கிறீர்கள். 1969 ல் வங்கிகள் திவாலாகிப்போனபொது( அப்போது பெரும்பாலான வங்கிகள் த்னியாரிடம் மட்டும்தான் இருந்தது) அரசுடமை ஆக்கப்பட்டது. பல சிறு முதலீட்டாளர்கள் வங்கி மூடலால் (திவாலா) தற்கொலை செய்யும் சூழல் இருந்தது. சிவாஜியின் "முதல் தேதி" படத்தில் இது சம்பந்தமான காட்சி கூட வரும்.
அரசுடமை ஆன பின் அதுவல்ல நிலைமை. 1390 கோடி ரூபாய் நஷ்டத்தில் போன இந்தியன் வங்கி
கூட இந்த ஆண்டு முதல் லாபம் ஈட்டத்தொடங்கியுள்ளது.
மற்றபடி தனியார் வங்கிகளின் நோக்கம் சேவை என்றிராது.
மாறாக 'லாபம்' ஒன்றையே குறிக்கோளாகக்கொண்டிருக்கும். அரசுடமையாக்கக்ப்பட்ட வங்கிகளின் வாராக்கடன் ௫௮000 ரூபாய். காரணம் பணியாளர்கள் அல்ல; அரசின் சாரதிகள் மட்டுமே.
தவிர , உலகமயமாக்கல் என்பதன் விளைவு லாபம் தரும் தொலைதொடர்பு என்று கூடப்பாராது அனைத்தையும் தனியார் மயமாக்குவதுதான். வேறு வழியில்லை என்று 'டங்கலில்' கையொப்பமிட்டவர்களும் இன்றையவர்களும், கூறிக்கொள்கிறார்கள். விளைவாக ௧௯௫௬ ல் தேசியமயமாக்கப்பட்ட எல் ஐ சி நிறுவனத்துக்கும் கூட தனியாரை ஊக்குவிக்கும் கொள்கை அமல் படுத்தப்படுகிறது. பணியாளர்கள் பொறுப்புகள் கூடும் என்பதற்காக போராடலாம் என்பது சரியனதல்ல என்பதை அறியுங்கள்.
அன்புடன்
திலிப் நாராயணன்.
கோத்ரா 389 001
( குஜராத்)
1 comment:
தோழர், தங்களது பதிவுகளை இன்று படித்தேன். தாங்கள் எழுதுவது சந்தோஷமாய் இருக்கிரது. தமிழிஸ், தமிழ்மணத்தில் பதிவுகளை இனைத்தால் இன்னும் பலர் படிக்க வாய்ப்பு கிடைக்குமே!
தொடர்ந்து எழுதுங்கள்....
Post a Comment