வலைப்பதிவில் தேட...

Thursday, July 28, 2011

கோத்ராவிலிருந்து ஒரு குமுறல்

இரண்டரை வருட கோத்ரா வாழ்க்கை நிறைய நினைவுகளைக்கொண்டிருக்கிறது. 2002 ஆம் வருடம் அஜய் தேவ்கான் நடிப்பில் தெ லெஜெண்ட் ஆஃப் பகத்சிங்  என்ற ஒரு திரைக்காவியம் வெளியானது. நானும் எனது தம்பி போன்ற அருமை நண்பன் தீபக்கும் சென்று படம் பார்த்தோம். ராஜ் குமார் சந்தோஷின்  இயக்கத்தில் ஏ ஆர் ரகுமான் இசையில் அது ஒரு அற்புதமான படம். வரலாற்று நாயகர் வரிசைப்படம்.

அந்தப்படத்தைப்பார்த்து விட்டு ஒரு விமர்சனம் எழுதி தீக்கதிர் பத்திரிகைக்கு அனுப்பி வைத்தேன். தோழர் எஸ் ஏ பி அவர்கள் மேற்கண்ட தலைப்பில் ஒரு கால் பக்கத்திற்கு வெளியிட்டு இருந்தார்( வெளியிடப்பட்ட நாள் 24/06/2002). அதனை இந்தப்பதிவில் இங்கே:

தெ லெஜெண்ட் ஆஃப் பகத்சிங் சமீபத்தில் வெளியான ஹிந்தித்திக்ரைப்படத்தின் பெயர் இது, அஜய் தேவ்கன் பகத்சிங்காகவே வாழ்ந்திருக்கிறார் என்று சொல்லும் அளவுக்கும் அற்புதமான நடிப்பு. இசைப்புயல் ஏ ஆர்  ரகுமானின் இசை. சந்தோஷின் இயக்கம். வரலாற்றுப்படம் என்பதால் அளந்து அளந்து ப்ரேம் செய்திருக்கிறார்கள்.
ஒரே நேரத்தில் ஐந்து படங்கலள் பகத்சிங்கை மையமாக வைத்து இந்தித்திரை உலகம் படம்  எடுத்துக்கொண்டிருக்கிறது.
 மற்ற நான்கு படங்கள்
1931 மார்ச் 31- சாகித்- பாபி தியோல்- சன்னி தியோல் ( வெளி வந்து விட்டது)
பகத்சிங்- ப்ரேம் சாகர் தயாரிப்பில்
ஷாகீத் பகத் சின்க்- தருன் கண்ணா தயாரிப்பில்
ஷாகீத் இ ஆஜம்- சோனு சூட் தயாரிப்பில்
இந்த 5 படங்களும் 2002 இல் அதாவது பகத்சிங்கின்  பிறந்த நூற்றாண்டு
விழாவியைக்கொண்டாட இன்னும் 4 வருடங்கல் பக்கியிருக்கும் பொழுது வெளியாகி யிருக்கின்றன.

ஒரு புரட்சிக்காரனை மையமாக வைத்து இது வரை 8 திரைப்படங்கள் ல்தயாரிக்கப்பட்டு இருப்பது பகத்சிங் ஒருவருக்கு மட்டும்தன். "புரட்சிக்காரர்கள் புதைக்கப்படுவதில்லை; மாறாக விதைக்கப்படுகிறார்கள்" என பொன் மொழி பகத்சின்க் என்ற   மாவீரனின் வரலாற்றைத் திரைப்படமாக எடுத்துஹிந்தித்திரையுலகம் நமது சந்ததியினருக்கு படமாக(பாடமாக) ஆக்கியிருக்ககிறது.
சினிமா உலகில் ஹாலிவுட், அடுத்து பாலிவுட் . விட்டால் கோலிவுட். நமது தமிழ் சினிமாதான் பாலிவுட் தயாரிக்கும் படங்களின் எண்ணிக்கைக்கு ஏடாக சில நேரங்களின் கூடுதலாகவும் திரைப்படங்களை தயாரிக்கும்.  நமது கோலிவுட்டில் இது போன்ற வரலாற்று நாயகர்களுக்கென்று ஏதேனும் படம் எடுக்கக்ப்பட்டிருக்கிறதா என்று தேட வேண்டியிருக்கிறது. ஆம். பி. ஆர். பந்துலு வின் தயாரிப்பில் வெளியான "கப்பலோட்டிய தமிழன்" ,"வீரபாண்டிய கட்டபொம்மன்" மற்றும் கண்ணதாசன் தயாரிப்பில் வெளியான "சிவகங்கைச்சீமை". இவை தவிர "பாரதி"யைக்குறிப்பிடலாம்.


பகத்சிங்கைப்பற்றிய  முதல் திரைப்படம் இந்தியில் 1954 இல் அதாவது அவர் தூக்கிலிடப்பட்ட 23 வருடங்கள் கழித்து வெளியானது.
தமிழில் பாரதி படம் 2000 ஆம் ஆண்டு பாரதியின்  நூற்றாண்டு (1982) கழிந்து 18 வருடங்களுக்குப்பிறகு வெளி வந்தது.அந்த வகையில்  ஞான ராஜசேகரன்
( பாரதி பட இயக்குநர்) தமிழ்திரை உலகிற்கு முன்னத்தி ஏர் பிடித்திருக்கிறார். ஆனால் அதை அடியொற்ற எந்தத்தயாரிப்பாளரும் இயக்குநர்களும் தயாரில்லை. நாம் இன்று வரலாறு படிக்கிறோம்.
 சரி ஏற்கனவே வர்லாற்றைப்படைத்து விட்டுச்சென்றவர்களைப்பற்றீய பதிவு புத்தகங்களில் மட்டுமல்ல. திரையுலகிலும் பிரதிபலிக்க வேண்டும்.  மோகமுள் நாவலை படமாக்கிய் திரு ஞான ராஜ சேகரன் "பாரதியை இயக்கியது கூட ஒரு சவால் மூலம்தான். மலையாள ரசிகர் ஒருவரின் வேண்டுகோலை ஏற்று மராத்தி நாடகக்கலைஞனை (சாயாஜி ஷிண்டே) வைத்து எடுக்கப்பட்ட அருமையான திரைப்படம். வரலாற்றுக் கதா நாயகர்கள் என்று எடுத்துக்கொண்டால் தமிழகத்தில் இன்னும் மக்கள் மனதில் வாழ்பவர்கள் எத்தனை எத்தனை பேர்? வ உ சி, சுப்பிரமணிய சிவா வ வே சு ஐயர்,வைத்திய நாதைய்யர், வாஞ்சி நாதன், வீரன் சுந்தரலிங்கம், ஒண்டி வீரன் அயோத்திதாசப்பண்டிதர், வேலு நாச்சியார், மருது இருவர், கணித மேதை ராமானுஜம் போன்றவர்களைத்தமிழ்த்திரையுலகம் பதிவு செயய தயாரவது எப்போது? சினிமா ஒரு சக்தி மிக்க சாதனம் என்றார் ரஷ்ய புரட்சித்தலைவர் லெனின்.




ஆனால் நம்மவர்கள் இன்னும் தாலி, அம்மா, தங்கை திவீரன், காதல் இப்படிப்பட்ட சென்டிமெண்டுகலிலும் இன்னும் ஆங்கிலப்பயர்களைத்தமிழ்த்திரைப்படங்கலளுக்கு சூட்டுவதிலுமே குறியாக இருக்கிறார்கள்.
இலக்கை மாற்றினால் இளைஞர்கள் திரைப்படத்தினின்றும் கூட பாடம் கற்றுக்கொள்ள முடியும் என்பதை தமிழ்ப்பட நாயகர்களும், தயாரிப்பாளர்களும், இயக்குநர்களும் புரிந்து கொள்ளும் காலம்தான் எப்போது?
திலிப் நாராயணன்
கோத்ரா
குஜராத்.

2 comments:

kashyapan said...

திலீப் நாராயணன் அவர்களே ! கற்பனையாக பகத்சிங்கிற்கு ஒரு கிராமத்துக் கதாநாயகியை உருவகித்து பாடும் காட்சியும் உள்ளது இந்தப்படத்தில் தானே ?---காஸ்யபன்

அழகிய நாட்கள் said...

திரு காஸ்யபன் !
நீங்கள் சொல்லுவது சரிதான். அது சினிமாத்தனமன்றி வேறிஇல்லை. உண்மையில் சொன்னால் ஷாகித் பகத்சிங் வாழ்வில் நமக்கு நேர்ந்ததைப்போல் ஒரு தருணம் அமையப்பெற வில்லை. அதாவது காதலகிக் கசிந்துருகுதலான வாழ்வு
அவரிடம் அறவே இல்லை. அதையும் அந்தப்படத்தில் அருமையாகப் பதிவு செய்திருப்பார் சந்தோஷி