வலைப்பதிவில் தேட...

Sunday, September 25, 2011

தமிழ் நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்க மாநாடு

விருது நகரில் கடந்த 15/09/2011 மாலை தொடங்கி 19/09/2011 அதிகாலை வரை தமிழ் நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கத்தின் சார்பில் 520 பிரதி நிதிகள் பங்கேற்ற மாபெரும் மா நாடு நடைபெற்றது. பார்வையாளர்கள் சிறப்பு அழைப்பாளர்கள் என சுமார் 800க்கும் அதிகமானோர் பங்கேற்ற பிரமாண்டம் அது. நூற்றுக்கும் மேற்பட்ட மராத்தான் வரவேற்புக்குழுவின் நானும் ஒருவன்.

வசந்தம் வெளியீட்டகம், அருவி மாலை, வம்சி புக்ஸ், என் சி பி எச், பாரதி புத்தகாலயம், புத்துயிர் வெளியீட்டகம், வாசல் பதிப்பகம், அலைகள் வெளியீட்டகம் உள்ளிட்ட பத்துக்கும் மேற்பட்ட பதிப்பாளர்களின் புத்தகக்கண்காட்சி, மற்றும் புகைப்படக்கண்காட்சி, சிற்பக்கண்காட்சி 15/09/2011 அன்று மாலை பிரபல எடிட்டர், இயக்குநர் பி. லெனின் அவர்களால் துவக்கி வைக்கப்பட்டது.

பி. லெனினுடைய  "நாக் அவுட்" குறும்படம் துவங்கி இன்று வரை ஆறாத  நட்பு கொண்டு த மு எ க ச வைத்தொடர்ந்து கொண்டிருக்கும் ஒரு திரைக்கலைஞர். அவரை அறிமுகம் செய்தவர் ஆய்வாளர் ஸ்ரீ ரசா. ஆட்டம் பாட்டத்துடன் அவர் பறையிசையினூடே கண்காட்சிகளைத்திறந்து வைத்துப்பேசினார். பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரத்தின் பாடல்களை மேற்கோள் காட்டினார்.

16/09/2011 அன்று எழுத்தாளர் நாஞ்சில் நாடன், சுதந்திரப்போராட்ட தியாகி என் சங்கரைய்யா, கலை இலக்கியப்பெருமன்றத்தின் சார்பில் அதன் பொதுச்செயலாளர் இரா காமராசு கேரள புரோகமன் கலாசாகித்ய சம்மேளன் அமைப்பின் பேரா. வி என் முரளி ஆகியோர் கலந்து கொண்ட பொது அமர்வு நடைபெற்றது. த மு எ க ச வின் மா நிலத்தலைவர் பேரா அருணன் தலைமையேற்க, புதிய கோணங்கி பிரகதீஸ்வரன் தொகுத்தளிக்க, விருது  நகர் மாவட்ட செயலாளர் அ. லட்சுமி காந்தன்  நன்றி நவில மதிய உணவுடன் கலைந்து சென்றேன்.

உணவு இடைவேளைக்குப்பிறகு பிரதி நிதிகள் மா நாடு என்பதால்  மாலைபொது நிகழ்வில் LITTLE TERRORIST என்ற குறும்படம் திரையிடப்பட்டது. எம் சிவக்குமார் அவர்கள் அது குறித்து பேசினார்கள்.

17/09/2011 பிரதி நிதிகள் முற்றிலும் பங்கேற்கும் நிகழ்வு என்பதால் கலந்து கொள்ள முடியவில்லை.

18/09/2011 காலை 10 மணிக்கு சீத்தாராம் எச்சூரி வராததால் வரலாற்றுப்பேராசிரியர் கேரளத்திலிருந்து கே. என் பணிக்கர் வந்திருந்து சிறப்புரையாற்றினார்.


மதிய உணவுக்குப்பிறகு புத்தகச்சந்தையை ஒரு ரவுண்டு கட்டியதில் பாமாவின் "கருக்கு", பேரா ச மாடசாமியின் "சொலவடைகளும் சொன்னவர்களும்" அருணனின் "கொலைக்களங்களின் வாக்குமூலம்", "அண்ணா ஆட்சியைப்பிடித்த வரலாறு", "எம்ஜியார் முதல்வரானது எப்படி", பூமணியின் "பிறகு" உள்ளிட்ட ஐந்து நாவல்கள் தொகுப்பு, சவுத் விஷன் பதிப்பகத்தின் காஸ்ட்ரோவின் ஏகாதிபத்திய எதிர்ப்பு உரை (மக்கள் பதிப்பு) ஸ்பார்டகஸ் (மக்கள் பதிப்பு) என்று ஒரு இரண்டாயிரம் ரூபாய்க்கு புத்தகங்கள் வாங்கினேன்.

மாலை மாநிலம் முழுதும் இருந்தும் புதுச்சேரியிலிருந்தும் வந்திருந்த கலைக்குழுக்களின் பேரணி விருது நகர் வீதிகளை வலம் வந்தது. புதிய  நிர்வாகிகளாக தலைவர் ச தமிழ்செல்வன் செயலர் சு வெங்கடேசன் பொருளர் ராமச்சந்திரன் தேர்வு செய்யப்பட்டனர்.


நிறைவாக "தோழர்களே தோழர்களே தூக்கம் நமக்கில்லை வாருங்கள் " பாடல் சேர்ந்திசையாக கரிசல் குயில் கருணா நிதி, கிருஷ்ணசாமி, பிரகதீஸ்வரன், வெண்புறா, சோழ நாகராஜன், நான் உள்ளிட்டவர் இசைத்தோம்.
மேடையில் எஸ் ஏ பெருமாள், ச தமிழ்செல்வன், சு வெங்கடேசன், பேரா அருணன், இரா தெ முத்து ஆகியோர்.

"சப்தர் ஹஷ்மி கலைக்குழு" நடத்தி வரும் புதுச்சேரி அன்பு மணியிடம் நலம் விசாரித்தேன் 21 ஆண்டுகளுக்குப்பிறகு.ஜூலை 1991 இல் புதுச்சேரியில் "பூஸ்டர் ஜாதா" வில் அன்பு மணியும்  நானும் வீதி நாடகக்கலைஞகளாக அரியாங்குப்பம் நெட்டப்பாக்கம் பகுதிகளில் காலரா போன்ற நாடகங்களில் நடித்து புதிய கற்போரை ஈர்த்து வந்ததை நினைவு படுத்திக்கொண்டோம். பயிற்சியளித்த பிரளயன், கருணா ஆகியோரும் மா நாட்டில் பங்கேற்றனர். நிலைவலைகளைப் பதிவு செய்தனர்.

தவிரவும் பிரபல தலித் எழுத்தாளர் புது விசை காலாண்டிதழ் ஆசிரியர் ஆதவன் தீட்சண்யா, புதிய ஆசிரியன் மாத இதழாசிரியர் பேரா ராஜு எல் ஐ சியில் ஓய்வு பெற்ற சியாமளம் என்ற காஸ்யபன் ஆகியோரையும் சந்தித்து உரையாடிக்கொண்டேன்.

18/09/2011 மாலை 6 மணி தொடங்கி விடிய விடிய கலை இலக்கிய இரவு விருது நகர் தேசபந்து மைதானத்தில் நடைபெற்றது. நிகழ்ச்சியில் மேடைக்கலைவாணர் நன்மாறன், பேராசிரியர் கு ஞானசம்பந்தன், பாரதி கிருஷ்ணகுமார் உரை வீச்சு ;விருது  நகர் மாவட்ட ஆட்சியர் மு. பாலாஜி அவர்களின் வாழ்த்துரை, திரைத்துறையிலிருந்து தன்னை ஒரு இடது சாரி என பகிரங்கமாக அறிவிக்கும் திராணி கொண்ட எஸ் பி ஜன நாதன், சுசீந்திரன், ஏகாதசி,சசி வசனகர்த்தா பாஸ்கர் சக்தி  ஆகியோரும் கலந்து சிறப்பித்தனர். 

"ஊருக்குச்சென்று கொண்டிருக்கிறேன்" என்ற தலைப்பில் (ஊருக்குத்திரும்பிக்கொண்டிருக்கிறேன் அங்கு யாரும் இல்லை -அப்பணசாமியின் சிறுகதைத்தலைப்பை சற்றே மாற்றி) கரிசல் மண்ணின் படைப்பாளிகளின்  சிறு கதைத்தொகுப்பு வந்திருந்த மாநில மாநாட்டுப்பிரதி நிதிகள் அனைவருக்கும் மணிமாறனால் தொகுக்கப்பட்டு வரவேற்புக்குழுவின் சார்பில் வழங்கப்பட்டது. 13 சிறுகதைகள் அடங்கியது அந்தத்தொகுப்பு. அத்தனையும் விருது நகர் கரிசல் பூமியின் மண் மணக்கும்  படைப்பாளிகளின் சிறுகதைகள் அடங்கிய கையடக்கத்தொகுப்பு.

அந்தத்தொகுப்பில் எனது சிறுகதையான "விட்டு விடுதலையாகி..."யும்  வெளியாகி இருக்கிறது. எனது எழுத்தை முதன் முறையாக மிகப்பெரிய ஒரு பண்பாட்டு, இலக்கிய, கலாச்சார, கலைஞர்களின் அமைப்பு வெளியிட்டு இருக்கிறது என்பதில் பேரானந்தம் எனக்கு...

8 comments:

hariharan said...

மாநாட்டைப் பற்றி பகிர்ந்தமைக்கு நன்றி தோழ்ரே!

கலயிரவு நிகழ்ச்சிகளையும் உரை வீச்சுகளையும் பதிவேற்றினால் நன்றாக இருக்கும். மாநாட்டிற்கு வராதவர்கள் பார்க்க வசதியாக இருக்கும்.

அழகிய நாட்கள் said...

93 முதற்கொண்டு விருது நகர் தேசபந்து மைதானத்தில் கலையிரவுகள் நடத்திய அனுபவம் ஏராளமாக இருக்கிறது.93 இல் தவத்திரு அடிகளார் 94 இல் ஆர் சி சக்தி 2000 ஆம் ஆண்டு ஞான ராஜசேகரன் ஐ ஏ எஸ்(பாரதி படத்திற்காக)என்று எல்லோருடனும் இணைந்து பணியாற்றியிருக்கிறேன். கலையிரவு நிகழ்வைத்தனியாகப்பதிவு செய்வேன்.
-திலிப் நாராயணன்.

விச்சு said...

நன்றி.. மாநாட்டை நேரில் பார்த்தது போன்று இருந்தது.

தமிழ்தாசன் said...

அன்பு தோழர்களே என் வலை பதிவில் கலை இரவு பதிவாக உள்ளது
http://thamizthasan.blogspot.com/

கவிதாகுமார் said...

புகைப்படங்களுடன் தங்கள் பதிவு மிகச்சிறப்பாக வந்துள்ளது. வாழ்த்துக்கள்.
என்றும் தோழமையுடன்,
ப.கவிதா குமார்

அழகிய நாட்கள் said...

தோழர் தமிழ் தாசன் அவர்களே!
எனது பதிவைப்படித்து பின்னூட்டமிட்டமைக்கு நன்றி. மேலும் தாங்களின் பதிவில் கலை இரவு மேடை பிச்சுக்குட்டியின் பின்னணியில் ஆர்வமாகப்பார்க்கும் சுவைஞர்கள் என புகைப்படங்கள் பிரமாதம். உங்களின் பதிவுகளை இனி பின் தொடர்வேன்
என்றென்றும்,
திலிப் நாராயணன்.

அழகிய நாட்கள் said...

திரு கவிதாகுமார் !
தங்களிடம் கூடுதலான பேரணி வீடியோக்கள்/ ஊர்வலக்காட்சிகள் இருப்பின் அதைத்தங்கள் பதிவில் இடவும்.
பேரன்புடன்,
திலிப் நாராயணன்.

அழகிய நாட்கள் said...

வணக்கம் திரு விச்சு அவர்களே!
தங்களது பின்னூட்டம் தெம்பளிக்கிறது.
பிரியமுடன்,
திலிப் நாராயணன்.