வலைப்பதிவில் தேட...

Monday, October 19, 2015

குற்றாலம் போயும் குளிக்க முடியவில்லை

ஆம் 17/10/2015 அன்று இரவு 9மணி அளவில் நான் நண்பர் ராதாகிருஷ்ணன், தங்கராஜ், முனியசாமி ஆகியோர் குற்றாலம் சென்றோம் குளிக்க...

குறைந்த அளவில் மட்டுமே ஐந்தருவியில் தண்ணீர் விழுந்தது. பெண்கள் பகுதியில் அதுவும் இல்லை.

இரவு உணவு முடித்து விட்டு பாண்டியன் ஹோட்டல் அறையில் தங்கினோம்.

நள்ளிரவில் மழை ஓசை. தட தடவனெ நண்பர்கள் எழுந்து அறையின் கதவுகளை அடைத்துவிட்டு மறு படியும் உறங்கினார்கள். நான் நல்ல தூக்கம்.

மறு நாள் விடிந்தவுடன்தான் தெரிகிறது.

பழைய குற்றாலம் சென்றோம் குளிக்க தடை விதித்திருந்தார்கள்
அதே கதிதான் மற்ற பாரம்பரிய ( பழைய, பிரதான மற்றும் ஐந்தறுவி) அருவிகளுக்கும். எந்த அருவியிலும் குளிக்க முடியாத படிக்கு வெள்ளம் வெள்ளம் வெள்ளம். வெள்ளத்தைப்புகைப்படம் வீடியோ மட்டும் எடுக்க முடிந்தது.No comments: