இந்தியாவில் இப்போதெல்லாம் சாதி ஒழிந்து விட்டது என்று ஒரு சாரார் கூறிக்கொண்டே தங்கள் சொந்த சாதியில் திருமணம் செய்து கொண்டு இருக்கிறார்கள்.
நாங்கள் சாதியெல்லாம் பார்ப்பதில்லை என்றும் சொல்லிக்கொள்ளுவார்கள். படித்த இடங்களிலும் சாதிப்பாகுபாடு நீங்கி விடவில்லை. ஒரு தாழ்த்தப்பட்ட மாணவனின் மருத்துவர் பட்டத்தை சிதறடித்து அவரது உயிரைப்பறித்த சாதி வெறியின் பதிவு இது. ஜஸ்பிரீத் சிங் சண்டீகர் மருத்துவக்கல்லூரியில் படித்தவர்.
கோயல் என்ற கொடியவன் உனக்கு இந்தக்கல்லூரியில் தலித் என்பதால்தானே இடம் கிடைத்தது உன்னை மருத்துவராக விட மாட்டேன் என்று சபதம் பூண்டு ஒரு மனிதாபிமான மருத்துவர் உருவாவதைத்தடுத்திருக்கிறான்(பேராசிரியர் என்ற பெயரில்)
ஜஸ்பிரித் சிங் பெயிலாக்கிய பாடம் "சமூக மருத்துவம்" ( Community Medicne)
வேண்டுமென்றே அந்தப்பாடத்தில் பெயில் ஆக்கி யிருக்கிறார் அந்த பேராசிரியர் (!)இந்திய சமூகம் இனி என்ன சொல்லப்போகிறது?
இரண்டாயிரம் பேருக்கு ஒரு மருத்துவர் என்றாகிப்போன இந்தியாவில் ஒரு ஹஜாரேக்கு 36 மருத்துவர்கள் மணி தோறும் உடற் பரிசோதனை செய்து கொண்டிருக்கும் தேசத்தில் இந்த சாதீயக்கொடுமை நடந்தேறி இருக்கிறது.
இந்தியன் என்பதிலோ தமிழன் என்பதிலோ எந்தப்பெருமையும் இருப்பதில்லை என்று ஆதவன் தீட்சண்யா குறிப்பிடுவார் ஏனெனில் நான்கில் ஒரு பகுதி மக்கள் சாதியின் பெயரால் அவமதிப்புக்கு உள்ளாகிக்கொண்டே இருக்கிறார்கள்.
அவலத்தின் பதிவு குறும்பட வடிவில்....இந்த இணைப்பில்
https://www.youtube.com/watch?v=bTdFSJ4Qnn8
http://thedeathofmeritinindia.wordpress.com/
2 comments:
இந்திய அளவிலான சாதீயப் பார்வையை பொதுவில் வைத்தது வரவேற்க தக்கது.சாதியம் கடப்பதற்கு கல்வி.பொருளாதார முன்னேற்றங்கள் அவசியம் தேவை.
உங்கள் கருத்துக்களை தமிழ்மணம்,இண்ட்லியில் இணையுங்கள்.
திரு ராஜ நடராஜன்!
மேலை நாடுகளில் நிறவெறி என்ற ஒன்று இருப்பதைப் போல் இந்தியாவில் சாதீயம் என்னும் பேய் மக்களை அலைக்கழித்து வாழ்வை
சீரழிக்கிறது.புத்தர் துவங்கி ராமானுஜர் மகாத்மா ஜோதிராவ் பூலே அம்பேத்கர் பெரியார் ஆகியோர் போராடியும் நிலை மை இன்னும் மாறவில்லை.
Post a Comment