நரசிம்ம ராவ் அப்போது பிரதமர். மன்மோகன் சிங் நாட்டின் நிதியமைச்சர் உலக மயமாதல் கொள்கைகளை நடைமுறைப்படுத்த ஆரம்பித்த நேரம். இப்போது இருபது வருடங்கள் ஓடி விட்டது அது பற்றி ஆங்காங்கே கருத்தரங்குகள் இரண்டரை லட்சம் விவசாயிகள் மரணத்திற்குப்பிறகு நடத்திக்கொண்டிருக்கிறார்கள்...
அதே காலகட்டத்தில் (1991-1996 காலம் ) முதல்வராக இருந்தவரும் இப்போதைய முதல்வருமான ஜெயலலிதா நரசிம்ம ராவை நோக்கி ஒரு வார்த்தை சொன்னார்.
"உங்களுக்கும் எனக்கும் தலைமுறை இடை வெளி இருக்கிறது".
நரசிம்மராவ் எப்போதும் போல் பதில்எதுவும் பேசாத ஒரு பிரதமராக
(இன்றை நாட்களில் மன்மோகன் சிங் இருக்கிறாரே அதே போல) இருந்தார்.
கவிஞர் வைரமுத்து கூட இதே போல ஒரு கவிதையில் சொன்னார்:
"என் அப்பாவுக்கு
நான் முற்போக்கு வாதி
எனது மகனுக்கு
நான் பிற்போக்கு வாதி"
கல்வி மறுக்கப்பட்ட சமூகத்தினின்றும் முதல் தலைமுறை கல்வி கற்று அரசு மற்றும் அரசு சார்ந்த வேலைக்கு வரும் நபர்கள் கூட இத்போன்ற தலை முறை இடை வெளிக்கு ஆளாகிறார்கள். ஒருவர் வந்து விட்டாலே போதும் அந்தக்குடும்பத்தின்/சந்ததியினரின் வாழ்வில் நிரந்தரமாக ஒளி வீசிவிடும் என்பதெல்லாம் இல்லை ( படிக்காத அரசியல் பின்னணியிலிருந்து வந்திருக்கிற சில அரசியல் குடும்பங்களின் நிலைமை என்பது வேறு)
நான்கு பேர் கொண்ட குடும்பத்தில் மூத்தவனாகப்பிறந்து முதல் தலைமுறைப்பட்டம் பெற்று 450 ரூபாய் அரசு சம்பளத்துக்கு வேலைக்குப்போய் , இருக்கிற கூரை வீட்டை ஓட்டு வீடாக மாற்றப்பட்டதே பெருங்காரியம்.
கரண்டு கூட இல்லாத நிலைமையில் கல்யாணம் செய்து வந்த மகராசியின் தயவால் (கரண்டு இல்லாத வீட்டுக்கு கலயாணம் ஒரு கேடா என்ற தொனியில்) கரண்டு இழுத்தது அடுத்த பெரிய காரியம்.
பழைய எஸ் எஸ் எல் சி முடித்து புகுமுக வகுப்பு முடித்து எம் பி பி எஸ் படிக்க விண்ணப்பித்து இன்டர்வியூகிடைக்காமல் போனது (1977இல்) பிறகு பி எஸ் சி பட்டம் (தாவரவியல்1980) முடித்து விட்டு பழைய படியும் பி எஸ் சி எம் பி பி எஸ் ஆவதாகக்கனவு கண்டு அதற்கு எழுதிப்போட்டு பேருக்கு மற்றொரு இன்டர்வியூ சென்று கரைந்து போன கனவுகளோடு தான் அரசு வேலை வாய்த்தது.
ஹிந்து பத்திரிகையில் 50 வருடத்திற்கு முந்தைய செய்தி சிலவற்றை கட்டம் கட்டி ஒரு பதிவாக எழுதி வருவார்கள்.
நானும் எனது தலைமுறைக்கோபத்தை 30 ஆண்டுக்கு முன்பாக கட்டம் கட்டி வந்த ஒரு பதிவை ஒட்டி ஒரு கடிதமாக எழுதினேன். ஆனால் அது வெளி வரவில்லை (பிரசுரமாகவில்லை) ஆயினும் அதன் நகல் இந்தப்பத்வில் //கடிதத்தின் இறுதியில் கணித மேதை ராமானுஜத்தின் வரிகள் உயிரின் துவக்கம், பிறப்பு, இறப்பு, பூஜ்யம், எல்லையற்ற நிலை//
ஹிந்துவில் வந்த செய்தி இது (10/09/1976)
7 தலைமுறைகள் என்றொரு நாவல் நீலபத்மநாபன் எழுதியிருப்பார். அதை த் தமிழில் "மகிழ்ச்சி" என்ற பெயரில் திரைப்படமாக திரு வ.கவுதமன் இயக்கியிருப்பார். நமது வாழ்விலும் மகிழ்ச்சி என்பதைப்பார்க்க 7 தலைமுறைகள் காக்க வேண்டியிருக்குமோ... தெரியவில்லை...
இன்பம் என்று சொல்லக்கேட்டதுண்டு
அது எங்கள் வீட்டுப்பக்கம் வந்தே இல்லை
என்னும் பட்டுக்கோட்டை வரிகள் நிழலாடுகிறது.
அதே காலகட்டத்தில் (1991-1996 காலம் ) முதல்வராக இருந்தவரும் இப்போதைய முதல்வருமான ஜெயலலிதா நரசிம்ம ராவை நோக்கி ஒரு வார்த்தை சொன்னார்.
"உங்களுக்கும் எனக்கும் தலைமுறை இடை வெளி இருக்கிறது".
நரசிம்மராவ் எப்போதும் போல் பதில்எதுவும் பேசாத ஒரு பிரதமராக
(இன்றை நாட்களில் மன்மோகன் சிங் இருக்கிறாரே அதே போல) இருந்தார்.
கவிஞர் வைரமுத்து கூட இதே போல ஒரு கவிதையில் சொன்னார்:
"என் அப்பாவுக்கு
நான் முற்போக்கு வாதி
எனது மகனுக்கு
நான் பிற்போக்கு வாதி"
கல்வி மறுக்கப்பட்ட சமூகத்தினின்றும் முதல் தலைமுறை கல்வி கற்று அரசு மற்றும் அரசு சார்ந்த வேலைக்கு வரும் நபர்கள் கூட இத்போன்ற தலை முறை இடை வெளிக்கு ஆளாகிறார்கள். ஒருவர் வந்து விட்டாலே போதும் அந்தக்குடும்பத்தின்/சந்ததியினரின் வாழ்வில் நிரந்தரமாக ஒளி வீசிவிடும் என்பதெல்லாம் இல்லை ( படிக்காத அரசியல் பின்னணியிலிருந்து வந்திருக்கிற சில அரசியல் குடும்பங்களின் நிலைமை என்பது வேறு)
நான்கு பேர் கொண்ட குடும்பத்தில் மூத்தவனாகப்பிறந்து முதல் தலைமுறைப்பட்டம் பெற்று 450 ரூபாய் அரசு சம்பளத்துக்கு வேலைக்குப்போய் , இருக்கிற கூரை வீட்டை ஓட்டு வீடாக மாற்றப்பட்டதே பெருங்காரியம்.
கரண்டு கூட இல்லாத நிலைமையில் கல்யாணம் செய்து வந்த மகராசியின் தயவால் (கரண்டு இல்லாத வீட்டுக்கு கலயாணம் ஒரு கேடா என்ற தொனியில்) கரண்டு இழுத்தது அடுத்த பெரிய காரியம்.
பழைய எஸ் எஸ் எல் சி முடித்து புகுமுக வகுப்பு முடித்து எம் பி பி எஸ் படிக்க விண்ணப்பித்து இன்டர்வியூகிடைக்காமல் போனது (1977இல்) பிறகு பி எஸ் சி பட்டம் (தாவரவியல்1980) முடித்து விட்டு பழைய படியும் பி எஸ் சி எம் பி பி எஸ் ஆவதாகக்கனவு கண்டு அதற்கு எழுதிப்போட்டு பேருக்கு மற்றொரு இன்டர்வியூ சென்று கரைந்து போன கனவுகளோடு தான் அரசு வேலை வாய்த்தது.
ஹிந்து பத்திரிகையில் 50 வருடத்திற்கு முந்தைய செய்தி சிலவற்றை கட்டம் கட்டி ஒரு பதிவாக எழுதி வருவார்கள்.
நானும் எனது தலைமுறைக்கோபத்தை 30 ஆண்டுக்கு முன்பாக கட்டம் கட்டி வந்த ஒரு பதிவை ஒட்டி ஒரு கடிதமாக எழுதினேன். ஆனால் அது வெளி வரவில்லை (பிரசுரமாகவில்லை) ஆயினும் அதன் நகல் இந்தப்பத்வில் //கடிதத்தின் இறுதியில் கணித மேதை ராமானுஜத்தின் வரிகள் உயிரின் துவக்கம், பிறப்பு, இறப்பு, பூஜ்யம், எல்லையற்ற நிலை//
ஹிந்துவில் வந்த செய்தி இது (10/09/1976)
இன்பம் என்று சொல்லக்கேட்டதுண்டு
அது எங்கள் வீட்டுப்பக்கம் வந்தே இல்லை
என்னும் பட்டுக்கோட்டை வரிகள் நிழலாடுகிறது.
2 comments:
நல்ல பதிவு.
நன்றி ஐயா!
பிரியமுடன்,
திலிப் நாராயணன்
Post a Comment