அரச வாழ்வு வாழ்ந்து வந்த சித்தார்த்தன் இந்த சமூகத்தில் மனம் மாறியதற்கு மூன்று காரணங்கள் உண்டு; நோயாளி, வயது முதிர்ந்தவர், மரணமடைந்தவர். என்பனவேஅவை. அந்த வழியில் நோயாளி என்ற முறையில் மனமிறங்கினார் புத்தர்.
ஆபரேஷன் தியேட்டருக்குள் செல்லும் முன்பாக கிங்கரர்கள் போல் இருவர் படுக்கையிலிருந்து ஸ்ட்ரெச்சருக்கு மாற்றி, ஸ்ட்ரெச்சரிலிருந்து மற்றொரு தடவை ஆபரேஷன் செய்யும் படுக்கைக்கு மாற்றி வைக்கிறார்கள். பச்சைக்கலர் முகமூடியும் அதுவுமாய். மூக்கில் ஒரு குழாயை மாட்டி, மயக்கமடையவைக்கிறார்கள். அப்புறம் ஒருமணி நேரம் கழித்து கிட்டத்தட்ட விழிப்பு அல்லது சுய நினைவு வரும் நேரம் சுருக் சுருக் என்று கிழித்த இடத்தைத்தைப்பது கொஞ்சம் சுயமான உணர்ச்சியை வரவழைக்கிறது. விழிக்கட்டுமென்று செல்லமாக கன்னத்தில் தட்டி பெயரைசொல்லி எழுப்புவது சற்றே காதில் விழுகிறது. அத்தோடு, குண்டுக்கட்டாகத்தூக்கி, பழையபடியும் ஸ்ட்ரெச்சருக்கு மாற்றி உயரத்தை உயர்த்தி விருவிருவென்று உருட்டிக்கொண்டு போய் நோயாளீயின் அறைக்குக்கொண்டு சென்று அன்பாக அப்படியே தூக்கி படுக்கையில் போட்டு விட்டு நகருகிறார்கள் அந்த்மு ரட்டு மனிதர்கள்.
ஒருமணி நேரம் கழித்து சற்றே உணர்வு வரவும், குடும்பத்தாரை,உறவினரை, நண்பர்களைப்பார்க்க விழிகள் கசிகிறது. மாமா மகன் குமார் சிரித்தான். அந்த கிங்கர மனிதர்களைப்பற்றிக்கேட்டேன். அவர்கள் முரட்டுத்தனமாக மனிதர்களை ஏன் இப்படி கையாளுகிறார்கள் என்றேன். அவன் சொன்னான் "மாமா அவர்களை நான் கொஞ்சம் கவனித்தேன் உங்களைத்தியேட்டருக்குக்கொண்டு போகும் முன்" என்றான்.
நோய் அல்லது விபத்து என்று யாருக்கும் வந்து விடக்கூடாது என்று நான் எனக்குள் நினைத்தேன் அதை அப்படியே என் மனைவியிடமும் பகிர்ந்துகொண்டேன்.
மனித உயிர் மகத்தானது என்று கேள்விப்பட்டு இருக்கிறேன்.
ஆயிரம் மனிதர்களை "கேசுகளாக"ப்பார்க்கும் அந்த தியேட்டர் மனிதர்களின் நடவடிக்கையில் அத்தகைய மனிதம் இருக்கவில்லை.
உலக சுகாதார மையம் (WHO) நோயற்றவர்களை ஆரோக்கியமானவர்கள் எனறு வகைப்படுத்தவில்லை. சரியான கல்வி, அந்த கல்விக்கேற்ற வேலைவாய்ப்பு, சரியான சம்பளம்(அதனுடன் கலந்த கலாச்சார வாழ்க்கை), ஓய்வு என்ற 5 அம்சங்களில் உள்ளங்கியிருக்கிறது மனித வாழ்க்கை என்று வரையறுத்திருக்கிறது. 80% பேர் ஒரு நாளைக்கு இருபதுரூபாய் சம்பாத்தியத்தில் பிழைப்பு நடத்திக்கொண்டிருக்கும் நமது நாட்டில் இது எந்த அளவுக்கு சாத்தியம் ?
2 comments:
உங்கள் பதிவுகளின் தளமோ அழகிய நாட்கள் அவைகளில் எப்படி இருக்கும் அழுகிய நாட்கள்...உங்கள் கரிசனம் என் மனதை நனைக்கிறது...இளகிய இருதயத்தையும் ஆண்டவன் படைத்துள்ளான்...நன்றி ஆண்டவா...
நண்பர் திரு ராச ராச சோழன்!
அனுபவமே சிறந்த ஆசான் என்பார் விவேகானந்தர். எனது இள வயது நாட்களையும்,ஞாபகங்களையும், அனுபவங்களையும் பதிவு செய்யும் பொருட்டு "அழகிய நாடகள்" என பதிவுலகத்துக்கு பெயரிட்டேன். மற்றபடி பதிவுகளில் உண்மைத்தன்மை இழையோட பதிவு செய்வது என்பது தான் பிரதானமாகத்தோன்றுகிறது. மேலும்,அழகும் அழுக்கும் நிறைந்ததுதான் வாழ்க்கை என நம்புகிற மனிதன் நான்
Post a Comment