அகில இந்திய அளவில் ஆர்ப்பரிப்புடன் பி எஸ் என் எல் அனைத்து அதிகாரிகளும், ஊழியர்களும் 16/06/2010 அன்று ஒரு நாள் மாவட்ட மாநில மற்றும் டெல்லி தலைமைஅலுவலகங்களில் காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை திட்டமிடப்பட்டு இருந்தது. ஏற்கனவே கடந்த ஏப்ரல் 20ஆம் தேதி மாபெரும் வேலை நிறுத்தத்தின் விளைவாக போடப்பட்ட மத்திய தொலைத்தொடர்பு அமைச்சரின் புரிந்துணர்வு ஒப்பந்தம் காலாவதியாகிப்போனதால் மீண்டும் இந்த வேலை நிறுத்தத்திற்கான அறைகூவல் விடப்பட்டிருந்தது. இந்த அகில இந்திய தர்ணா( பழி கிடத்தல்) போராட்டத்துக்கு முன்னோடியாக 14/06/2010 அன்று மதிய வேளை ஆர்ப்பாட்டம் வெற்றிகரமாக நடத்தி விட்டிருந்தோம்.
16/06/2010 அன்று காலை பத்துமணி சுமாருக்கு எனது இருசக்கர வாகனத்தில் வந்து கொண்டிருந்தேன். மாவட்ட அளவிலான போராட்டத்துக்கு தலைமை ஏற்கும் பணி என்னுடையது. அப்போதுதான் நான் சற்றும் எதிர்பாராத வகையில் ஒருவர் சாலையைக்கடக்க எத்தனிக்க மதுரை சாலை பி ஆர் சி பணி மனைக்கு எதிர்புறம் இருக்கின்ற சி ஐ டி யு சங்க அலுவலகத்தின் முன்பாக சாலையில் தடுமாறி சாலையின் இடது புறம் அவர் விழ சாலையின் வலது புறம் வண்டி பிரேக் பிடிக்காமல் போக, கீழே விழுந்ததில் இரண்டு முட்டிக்கால்கள், வலது கை முட்டி,வலது நெற்றியில் காயம், வலது தலையின் பின்புறம் தலையில் ரத்தக்காயம் ( மூன்று தையல்கள் முதலுதவிச்சிகிச்சையிலேயே), வலது காதிலிருந்து குருத்தெலும்பு ஒடிந்து இரத்தம் ஒழுக, வலது காலர் எலும்பு முறிய, புத்தி பேதலித்த ஒரு சூன்ய நிலையில் இரத்தம் ஒழுக நான்.
நல்லவேளையாக அந்த வழியாக வ்ந்த ஒரு நண்பர் எனது செல்லை எடுத்து வீட்டு எண்ணை அழைத்து விஷயத்தை சொல்ல, எனது துணைவியாரோ பதறியடித்து பக்கத்து வீட்டு அக்காவுடன் ஓடி வர ஒரு சில ஆட்டோக்காரர்கள் இரத்தக்காயம் பட்ட என்னை ஏற்றிச்செல்ல மறுக்க, ஒரு நல்ல அட்டோக்காரரின் உதவியால் என்னுடன் காயம் பட்ட அந்த அவரையும் ஏற்றிக்கொண்டு ராமமூர்த்தி சாலையில் உள்ள திருவேங்கடம் மருத்துவமனை அழைத்துசெல்லப்பட்டோம்.
முதலுதவி சிகிச்சை முடிந்தகையோடு அவர்களது மருத்துவமனை ஆம்புலன்சிலேயே பாதுகாப்பாக மதுரை வடமலையான் மருத்துவ மனைக்கு கொண்டு சென்றார்கள் என்னை. கீழே விழுந்தவருக்கு லேசான காயம் என்பதால் அவர் திருவேங்கடம் மருத்துவமனையிலேயே சிகிச்சை எடுத்துக்கொண்டார்.
2 comments:
வாழ்கையில் சில சமயங்கள்...சோதனை மட்டுமே வந்து வந்து சோதிக்கும்...
திரு ராச ராச சோழன்,
தங்களது பின்னூட்டம் என்னை சிந்திக்கத்தூண்டியது. தொடர்ந்து எழுத இருக்கிறேன்.
Post a Comment