வலைப்பதிவில் தேட...

Friday, July 30, 2010

மருத்துவ மனையில்...

கடந்த ஜூலை 5ஆம் தேதி வெளியிட்ட இடுகையில் வடமலையான் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட விபரம் மட்டுமே குறிப்பிட்டிருந்தேன். விருது நகர் திருவேங்கடம் மருத்துவ மனையின் ஆம்புலன்ஸ் வண்டியில் கையில் ஒரு ட்ரிப்ஸ் பாட்டிலுடன் எனது மனைவி தம்பி அழகு, நண்பர் சீனி ஆகியோரோடு போய் முதல்மாடியில் உள்ள ஒரு அறையில் (203 )ஸ்ட்ரெச்சரிலிருந்து இறக்கி விடப்பட்டேன். தொடர்ச்சியாக பாட்டில்கள் மாறிகொண்டிருந்தது. சோறு சாப்பிடும் தேவை இல்லாமல் போயிருந்தது. ஒரு கார் அமர்த்திக்கொண்டு தம்பி வைரம் நண்பர்களோடு வந்து விட்டிருந்தான். தகவல்கள் பறக்க, பாப்பா தியாகராஜர் பொறியியற்கல்லூரியிலிருந்து 'அப்பாவுக்கு என்ன ஆச்சு' என்று அழுகையுடன் வந்த விதம் என்னை கண் கலங்க வைத்தது. மீண்டும் மீண்டும் மனைவியின் அழுகை வேறு  அடிவயிற்றை என்னவோ செய்தது. கோயமுத்தூரிலிருந்து  மகன் திலிப் மறு நாள் ஆபரேஷனுக்கு முன்பாக வந்து விட்டான். மதுரையில் இருக்கும்  மாமா மகன் குமார் மற்றும் பி எஸ் என் எல் அதிகாரிகள்/ஊழியர்கள் என்று  பத்து இருபது பேர் சகிதம் ஆபத்துக்கு உதவி எனும் வாக்கின் படி அரக்கப்பரக்க வந்திருந்தார்கள். ஒன்றும் ஆகாது கவலைப்படாதீர்கள் என்ற ஆதரவு வார்த்தைகள் அனைவர் வாயிலிருந்தும் வந்து விழுந்துகொண்டிருந்தன. கண்ணீருடன் அவற்றை எதிர் கொண்டது எனது மனைவி மட்டும்தான்.
  நியூரோ மற்றும் ஆர்த்தோ மருத்துவர்கள், தாதிகள் பரபரப்புகளுடன். எமெர்ஜென்ஸி வார்டிலிருந்து ஸ்கேன் பகுதிக்கு ஸ்ட்ரெச்சரில் கொண்டு செல்லப்பட்டேன். அப்போது அந்த வண்டியைத்தள்ளிக்கொண்டு வந்த பணிப்பெண்"எப்படி சார் விழுந்தீங்க" என்றார். நான் உங்களுக்காக "இனி ஒரு முறை விழுந்துகா ண்பிக்க முடியாத சூழலில் இருக்கிறேன்" என்றேன்.
16ஆம் தேதி விபத்து நடந்தது. 17ஆம்தேதி இரவு 0830 மணீக்கு ஆப்பரேஷன் வலது காலர் எலும்பை சர்ஜரி செய்யவேண்டும் என்று குறித்துவிட்டார்கள். இதற்கிடையில் தரை தளத்திலிருக்கும் ஒரு அறைக்கு ( A20) மாற்றி விட்டார்கள்.

3 comments:

துளசி கோபால் said...

ஐயோ!!!!

காலர் எலும்பு முறிஞ்சா வலி கொன்னுப்புடுமே:(

விரைவில் குணம் பெற வேண்டுகின்றோம்.

ராசராசசோழன் said...

சீக்கிரம் குணம் பெற இறைவனை வேண்டுகிறேன்...

அழகிய நாட்கள் said...

நண்பர் துளசி ராஜகோபால்!
நண்பர் ராச ராச சோழன்!
வருகைக்கும் தங்களது பின்னூட்டத்திற்கும் நன்றி.
நோய்வாய்ப்படுதலால்/
முதுமையினால்/
விபத்துகளால்/ இன்னும் சொல்லப்படாத காரணங்களால் ஏற்படும் வலிகள் எல்லோரும் அறிந்திருப்பார்கள் என்பதற்கில்லை. அதன் நிமித்தமே இந்தப்பகிர்வும் பதிவும். இப்போது நலமாக இருக்கிறேன். பதிவுலகில் பிற சிந்தனைகளையும் எழுதுவேன் என்றென்றும்.