ரமேஷ் பாபு மானுட விடுதலை பிளாக்கில் கல்வியாளர் திரு புதுவை ஜே .கிருஷ்ண மூர்த்தியின் நேர்காணலைப்பதிவு செய்திருந்தார் "புதிய புத்தகம் பேசுது" மாத இதழுக்காக. அதன் பின்னூட்டமாக நான் இப்படி பதிவு செய்திருந்தேன்:
//1989 இல் திரு ஜே கே, பிரளயன், முகில், வெங்கடேஷ் ஆத்ரேயா என்ற பெரிய வீதி நாடகக்கலைஞர் பட்டாளம் காரைக்குடி கம்பன் மணி மண்டபத்தில் B G V S கலைப்பயணத்தை நடத்தியதும் அதன் வேர்கள் என்னை விழுதாகப்பிடித்துக்கொண்டது. அப்புறம் 1990 ஜூலையில் புதுவை அறிவொளியில் சென்று என்னை ஒரு வீதி நாடகக்கலைஞனாக மாற்றிக்கொண்டேன். விருது நகர் வந்து பேரா. ச. மாடசாடி, தனிஸ்லாஸ், குழந்தைவேல் பாண்டியன் ஆகியோர் வழிகாட்டுதலில் நானே ஒரு குழுவை அமைத்து 1990இல் அக் 2 துவங்கி நவ 14 வரை ஒரு 44 நாடகள் காமராஜர் மாவட்டம் முழுதும் சுமார் 165 இடங்களில் வீதி நாடகங்களின் மூலம் அறிவொளி பரவ வேலை செய்தோம். மன நிறைவான பாண்டி அறிவொளி இயக்கத்தின் முன்னோடியின் பேட்டி பாராட்டுதலுக்குரியது//.
அதற்கு அவர் இந்தபதிலை அளித்தார்.
திலீப் நாராயணன், வணக்கம். வாழ்த்துக்கள். பின்னூட்டத்திற்கு நன்றி. உங்களை போன்ற தோழர்கள் உங்களின் அனுபவங்களை எழுதுவது மிகவும் பயனுள்ளதாக இருக்கும். 165 இடங்களில் கலை நிகழ்ச்சி நடத்திய அதற்காக உழைத்த, உங்களுடன் பழகிய தோழர்களின் அனுபவங்களை எழுதுங்கள்.
அந்த 44 நாட்கள் புழுதி படிந்த கால்களுடன் மாவட்டத்தையே வலம் வந்தோம்
02/10/1990 அன்று கலைப்பயணம் தொடங்கியது அருப்புக்கோட்டையில் அன்றய மாவட்ட ஆட்சியர் திரு டி எஸ் சிரிதர் அவர்களின் துவக்கவுரையுடன். அந்த ப்பத்திரிகைச்செய்தி:
ஒவ்வொரு தாலுகாவாகப்பயணம் செய்தோம். பகலில் பள்ளிகளில் இரண்டு நிகழ்ச்சிகள் இரவில் கிராமங்களில் குறைந்தது இரண்டு சில நேரங்களில் மூன்று கூட நடத்துவோம். எழுத்தறிவுத்தூதராக ப்பேராசிரியர் ச. மாடசாமி மிகுந்த அக்கரை கொண்டு வழி காட்டுதல் செய்வார். 44 நாட்களில் கிட்டத்தட்ட 165 நிகழ்ச்சிகள் நடத்தினோம்.
பேராசிரியர் தனிஸ் லாஸ் எங்களது குழுவில் ஒருவர். விவசாயத்தொழிலாளி பால் ராஜ் மற்றொருவர். சமூகத்தின் அனைத்துப்பிரிவினரையும் பிரதி பலிக்கும் 22 பேர்களைக்கொண்ட ஒரு குழு குழுவில் நான்கு பெண்கள். அப்போது +2 முடித்த சகோதரி பூங்கோதை ஒருவர் மற்றொருவர் காந்தீயன் படிப்பில் முனைவருக்கு தயாராகிகொண்டிருந்த பிரேமா. ஓவிய ஆசிரியர் அழகு, கிராம வங்கி ஊழியர் மூர்த்தி, பட்டங்களைச்சுமந்திருந்த ஆறுமுகப்பெருமாள், உமா சங்கர், ஸ்டீபன் பொன்னையா,முத்துச்சாமி,வெங்கடேஸ்வரி, ஆசிரியர் புலியூரான் சேது கணபதி, எல் ஐ சி ஏஜண்ட் மோகன் குமார், தொலைபேசி ஆய்வாளர் செல்வம் என அது மிகச்சிறந்த பட்டியல். நான் தான் குழுவின் தலைவர். நிறைவு விழா ராஜபாளையம் அரசு மேனிலைப்பள்ளியில். துவக்கி வைத்த மாவட்ட ஆட்சியரே அங்கு வந்து நிகழ்ச்சியை நிறைவு செய்தார்.
அன்பே சிவம் படத்தில் கமலக்குப்பக்கத்தில் வந்து "தலீவா" என்று சொல்லுவாரே அவர் அப்போது எம் ஏ வரலாறு ராஜுக்கள் கல்லூரியில் படித்துக்கொண்டு எங்களுக்கு ஆனந்தா தங்குமிடத்தில் உதவியாக பேரா ரவிச்சந்திரனோடு. அந்த நிறைவு நால் விழா படத்தை பேரா ச மாடசாமி அப்போது நடத்திய 'வாசல்" இதழில் பிரசுரம் செய்திருந்தார். அந்தப்புகைப்படம் இது:
படத்தில் எனது ஒன்றரை வயதுக்குழந்தை திலிப் சுகதேவை தோளில்
சும ந்தபடி நான்(படத்தை கிளிக் செய்து பெரிதாக்கி பார்க்கவும்)
ஆயிரக்கணக்கான மக்களை சந்தித்தோம். எனது ஒரே ஆசை அப்போதெல்லாம் கல்வி மறுக்கப்பட்ட நாலில் ஒரு பகுதி மக்களுக்கான விடுதலை வேள்வியான எழுத்தறிவு இயக்கத்தில் அவர்கள் அனைவரும் கலந்து கொண்டு விட்டால் என்னவாக இருக்கும் என்பதாக இருந்தது. ஆனால் நாங்கள் சென்ற கிராமங்களின் எண்ணிக்கையில் அவர்களுக்காக கலை நிகழ்த்தியது நாலில் ஒரு பகுதி மட்டுமே அதாவது சுமார் 40 இடங்களாக இருக்கக்கூடும்.

2 comments:
நல்ல பதிவு.
வாழ்த்துக்கள்.
தங்கள் வருகைக்கும் பின்னூட்டத்திற்கும் நன்றி!.
Post a Comment