குஜராத் மாநிலம் கோத்ரா ரயில் எரிந்த நேரம் அது( பிப்ரவரி 27,2002 காலை சுமார் 8 மணிக்கு) அதை ஒட்டிய நிகழ்வுகளால் வெளியே எங்கேயும் செல்ல முடியாது. எங்கேயும்ஊரடங்கு. ஒவ்வொரு போலீஸ் ஸ்டேஷன் வாரியாக ஊரடங்கு (CURFEW) உத்தரவு. நம்ம ஊரைப்போல ஒரு போலீஸ் 30(2) சட்டம் அல்லது 144 தடைச்சட்டம்( நான்கு பேருக்கு மேல் கூட்டமாக ஒரு இடத்தில் இருக்கக்கூடாது) என்பதையெல்லாம் தாண்டியது ஊரடங்கு. நடமாட்டமே இருக்கக்கூடாது. அல்லது அவர்கள் சொல்லும் நேரத்தில் மட்டுமே ஊருக்குள் நடமாட முடியும்.
ஒரு 12 நாட்கள் நான் தங்கியிருந்த தொலைபேசி நிலைய வளாகத்திற்குள் இருக்கிற குடியிருப்புதான். அவ்வப்போது தொலைபேசி நிலையத்திற்கு எதிரில் இருக்கும் கலெக்டர் அலுவலகத்தினின்றும் திருமதி ஜெயந்தி ரவி (DISTRICT MAGISTRATE AND COLLECTOR) குஜராத்தியில் ரேடியோவில் பேசுவார் .
எட்டாம் எண் போலீஸ் ஸ்டேஷன் ஏரியாவுக்கு இரண்டு மணி நேரம் ஊரடங்கு ரத்து என்று செய்தி வரும் அதைஒட்டி நாங்கள் காய்கறி வாங்க வெளியே செல்ல முடியும். எங்கள் தொலை பேசி நிலையத்தின் பின்னால் தான் மாவட்ட எஸ் பி அவர்களின் அலுவலகம். RAF என்று பொறிக்கப்பட்ட ஊதாக்கலரில் சீருடை அணிந்த ஆண் பெண் காவலர்கள் வஜ்ரா என்ற வாகனத்துடன் எங்கு பார்த்தாலும் திரிந்தார்கள். குறிப்பாக எஸ் பி அலுவலகத்தில் பல மணி நேரங்கள் வண்டியிலும் வெளியிலும் இருந்தார்கள்.
நான் தங்கியிருக்கும் கோத்ரா தொலைபேசியகத்திலிருந்து கோத்ரா மாவட்ட தொலைபேசி அலுவலத்திற்கு சென்று வர ஒரு ஜீப் கூட இருந்தது. ஆனாலும் அதில் செல்ல முடியாத நிலைமை. மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் சென்று முறைப்படி நாங்கள் வேலை செய்ய இருப்பதால் எங்களுக்கு ஒரு "பாஸ்" வேண்டு மென்று அதற்கான மனு கொடுத்து கலவரம் நடந்து நான் கைந்து நாட்கள் கழித்து 04/03/2002 அன்று ஒரு கடிதம் (பாஸ்) சப் டிவிஷனல் மாஜிஸ்ட்ரேட் அவர்களின் கையொப்பத்துடன் தரப்பட்டது.
அந்தப்பாஸை வைத்துக்கொண்டு ஊரடங்கு அமலில் இருந்தாலும்கூட நாங்கல் சுதந்திரமாக ஜீப்பில் வெளியில் சென்று வர முடிந்தது. அது மேலும் ஒரு ஒருவாரகாலத்திற்கு. எனது பெயர்" நாராயண்" என்றுதான் இருக்கும். நாராயணன் என்பதெல்லாம் தெற்கேதான் வடக்கே செல்லாது. அந்த உரிமச்சீட்டின் அசல் இதோ:
No comments:
Post a Comment