ஒரு ஆங்கில ஆண்டு முடிந்து அடுத்த வருடத்தில் அது அடி எடுத்து வைக்கத்துவங்கும் நேரமாக டிசம்பர் 31 நள்ளிரவு 1200 மணி எப்போதும் இருந்து வருகிறது. அப்படி ஒரு கட்டமைப்பு வடிவமைக்கப்பட்டிருக்கிறது.
கிறித்துவர்கள் இந்த நாளைக்கொண்டாடியது போக இந்துக்கோவில்களிலும் கூட இப்போது சிறப்பு பூஜைகள் நடக்கின்றன.
அப்படிப்பட்ட ஒரு புத்தாண்டு விருது நகர் மதுரை சாலையிலிருக்கும் சி எஸ் ஐ சர்ச்க்கு முன்பாக 1980 டிசம்பர் 31 இரவு பனிரெண்டரை மணி வரை சவாரிக்காக காத்திருந்த புத்தாண்டும் எனது கணக்கில் இருக்கிறது.
இந்த வருடம் (2011) புத்தாண்டுகொண்டாட்டம் (!) ஹெரிட்டேஜ் அகாடமி இ எம் பை பாஸ் சாலை கொல்கத்தா என்ற அரங்கத்தில் எங்களது அகில இந்திய சங்கத்தின் மாநாட்டுப்பந்தலில் அமைந்தது.
இந்த மா நாடுகள், அதில் பங்கேற்பது என்பது 1981லிருந்து என்னைத்தொடர்ட்ந்து வந்து கொண்டிருக்கிறது.
1982 ஆம் ஆண்டு புத்தாண்டுக்கும் கூட இதே போல அன்றைய பெயர் கல்கத்தா. அங்கேதான் கொண்டாடினேன் தோழர்களுடன்.
அப்புறம் 1984 சென்னை விஜயசேஷ் கல்யாண மகாலில் அடுத்த மாநாடு
அதற்கப்புறம் 1987 கர் நாடக மாநிலம் ஹூப்ளியில். மா நாடு முடித்து கோவா வடக்கு தெற்கு என சுற்றி விட்டு வந்தோம்.
1991 அக்டோபரில் மத்தியப்பிரதேச மாநிலத்தலை நகர் போபாலில். இதில் கலந்து கொள்ள முடியவில்லை.
அடுத்தபடியாக 1994 திருவனந்தபுரத்தில்.
எல்லாமே கிட்டத்தட்ட டிசம்பர் மாதங்களில்தான்.
கணக்கியல் அதிகாரியாக பதவி உயர்வு பெற்ற பிறகு,
1995 ஜன 1 மத்தியப்பிரதேச மாநிலம் ஜபல்பூர் பயிற்சி நிலையத்திற்கு அருகில் இருக்கும் நர்மதா நதி பாய்ந்தோடும் "பேடகாட்" என்ற இடத்தில்
மாநாடுகள் என்றால் அது கிளை மா நாடு, மாவட்ட மாநாடு, மாநில
மாநாடு, அதையும் தாண்டியதுதான் அகில இந்திய மா நாடு.
இதில் வாழ்த்துரை வழங்கச்செல்லும் அரங்கங்கள் எல் ஐ சி, பேங்க்,போக்குவரத்து, ஆசிரியர் அரங்கங்கள் போன்றவை கணக்கில் வராது.
1997 ஆம் ஆண்டு புவனேஸ்வரில் அகில இந்திய் மாநாடு பூரி கோனார்க் சுற்றி வந்தோம் கட்டாக் நந்தன் கான் பூங்கா சுற்றிப்பார்த்தோம்.
1998 பெங்களூரில் அடுத்த மாநாடு
1999ஆம் ஆண்டின் துவக்கம் சென்னை நுங்கம்பாக்கம் சூளை மேடு கோபால் நிவாஸ் ஹோட்டலில் எனது குடும்பத்தினருடன் அப்போதுதான் குழந்தைகளுடன் கிஷ்கிந்தா, வி ஜி பி, பீச் என்று சுற்றிப்பார்த்தோம்.
1999 மும்பையில் மாநாடு (1995 இல் மும்பை என பெயர் மாற்றம் கண்டது. அப்போது நான் மும்பையில் பணியாற்றிக்கொண்டிருந்தேன்.)
2000 ஆவது ஆண்டில் டெல்லியில் மாநாடு. ஆக்ரா சுற்றினோம்.
2002ல் கல்கத்தாவில் அடுத்த மா நாடு காளி ராமகிருஷ்ணர் அவதரித்த இடம் பார்த்தோம்.
2003 இல் கவுகாத்தி, மேகாலயா சிரபுஞ்சி சுற்றித்திரும்பினோம்.
2006இல் ஹைதராபாத்.
2008இல் ஜெய்ப்பூர்
2010 டிசம்பர் 29 தொடங்கி ஜன முதல் தேதி 2011 வரை கொல்கத்தாவில் மீண்டும் மாநாடு.
புத்தாண்டுகள் தொடர்வதைப்போல் எனது மா நாட்டுப்பங்கேற்பும் தொடர்ந்து கொண்டிருக்கிறது.
2 comments:
இனம் மறந்து இயல் மறந்து
இருப்பின் நிலைமறந்து
பொருள் ஈட்டும் போதையிலே
தமிழின் தரம் மறந்த தமிழனுக்கு
நினைவூட்டும் தாயகத் திருநாள்
உழவர் திருநாள் வாழ்த்துக்கள்!
உலவு இணைய தளத்திற்கு!
தங்களது வாழ்த்துக்களுக்கு நன்றி!
தமிழர் மற்றும் உழவர் திருநாளில் தமிழர் மரபுவீழ்ந்து விடாதிருக்க செயலாற்றுவோம்.
Post a Comment