அண்ணா மறு மலர்ச்சித்திட்டத்தில் சுடுகாடுகள் காண்ட்ராக்டர்கள் மூலம் கட்டப்பட்டு விட்டன.
அது என்ன மறுமலர்ச்சி என்று புரிபடவில்லை ஆமத்தூரில் நாடார் சுடுகாடு இருக்கிறது பக்கத்தில் BC சுடுகாடு இருக்கிறது ( எரிப்பதற்கான கான் கிரீட் கொட்டகைதான் ) .
ஆனால் SC (தலித்துகள்) க்கென்று தட்டுப்படவில்லை; கட்டப்படவே இல்லையோ என்னவோ ?
பல கிராமங்களில் ஒரே சாதியினர் இருந்தால் அவர்களுக்கென்று சுடுகாடு அமைந்து விடுகிறது எந்தச்சிரமமும் இல்லாமலேயே.
ஆனால் தலித்துகள் வசிக்கும் கிராமங்களில் ஒன்று உயர் சாதியினருக்கும் மற்றொன்று தலித்துகளுக்கும் என்று ஆகிப்போகிறது.
சாத்தூருக்குப்பக்கத்தில் தலித்துகளிலேயே ஒரு பிரிவினரான பள்ளர்களுக்கு ஒன்றும் அருந்ததியினருக்கு ஒன்றுமாக சுடுகாடு இருக்கிறது.
ஒரு சிக்கல் வருகிறது என்ன சாதியென்றே தெரியாத ஒரு அனாதைப்பிணத்தை எங்கே எரிப்பது என்று.
ரொம்ப சிம்பிள் வாழ்வில் காணா சமரசம் உலாவும் இடமான சுடுகாட்டில் இறந்து போன அப்படிப்பட்டவரை அவர் தலித்தாக இருந்தாலும் கூட BC மயானத்தில் எரித்து விடலாம்.
எரிக்கும் நேரத்தில் BC மக்கள் யாரும் சுடுகாட்டுக்கு வந்து செக்கிங் செய்யப்போகிறார்களா என்ன?
வாழும் நாட்களிலேயே சாதி ஒழியப்பாடுபட்டவர்கள் பெரியார், அம்பேத்கர் போன்றோர்கள்.
ஒரு பக்கம் மனுவைக்கையில் வைத்துக்கொண்டே சாதியை ஒழித்து விட நினைத்த மோகன் தாஸ் கரம்சந்த் காந்தி என்றுவாழ்ந்த பூமியில் இன்னுமின்னும் அதாவது
இறப்பிற்குப்பிறகும் சாதியைத்தூக்கிக்கொண்டாடி என்ன ஆகப்போகிறது.?
சமத்துவ சுடுகாடு வரட்டும்.

4 comments:
நல்ல பதிவு.
நன்றி ஐயா.
பிரியமுடன்
திலிப் நாராயணன்.
நல்ல பதிவு இன்னும் விரிவாக எழுதியிருக்கணும் தோழா...
காலம் கடந்துவிடவில்லை எழுதத்தொடங்குங்கள்.ப்ளீஸ்.
நன்றி தோழர் காமராஜ்!
எழுவதுதான் எழுத்து என்பதை உணர்ந்திருக்கிறேன். பதிவு செய்கிறேன்.
பேரன்புடன்,
திலிப் நாராயணன்.
Post a Comment