ஒரு முக்கிய விஷயம் பதிவு செய்யப்பட வேண்டிய அவசியத்தில் இருக்கிறது இன்றைய தேதிக்கு...
ஐ மு கூ 2 பதவி ஏற்று இரண்டாண்டுகள் நிறைவடையப்போகிறது
( மே 2011ல் தான்)
கடந்த ஆறேழு மாதங்களில் மட்டும் பெட்ரோல் விலை ஏழாவது முறையாக உயர்த்தப்பட்டிருக்கிறது. ( வெங்காயம் விலை ஏறியதற்கு பதிலடி கொடுத்தவர்கள் தில்லியில் நமது வாக்காளர்கள் )
பெட்ரோல் விலை ( அது மட்டுமல்ல என்பது எப்போதும் உள்ள பிரச்சனை.. அதாவது பெட்ரோல், டீசல், கெரேசின் ( கிருஷ்னா ஆயில்) சமையல் கேஸ் இத்யாதியும் தான்...) உயர்வென்றால் பெட் ரோலியப்பொருட்ளின் உயர்வு எனக்கொள்க..
பெட் ரோல் டீசம் விலை உயர்வைக்கண்டித்து இடது சாரிகள் ஐ மு கூ 1 காலங்களில்முத்திரை பதித்தது இன்றைக்கும் நிழலாடுகிறது.
ஒரு தடவை அவர்கள் பெட்ரோலியப்பொருட்கள் விலை உயர்வைத்தடுத்து நிறுத்தினார்கள்.
பிறிதொரு முறை ஏற்றப்பட்ட பெட்ரோலியப்பொருட்களின் விலையைக் குறைத்து வரலாற்று சாதனை படைத்தார்கள்.
இன்றைக்கு அந்த சூழல் ஏதும் இல்லை
மத்தியில் ஆளும் அரசு
அமெரிக்க அணு ஆயுதக்கொள்கையினை நடைமுறைப்படுத்த எத்தனிக்கும் ஏஜென்டாக
உலக வங்கியின் அடியாளாக
GATT ஒப்பந்த நாயகனாக
அமெரிக்க ஏவலாளியாக
உலக மயமாதலின் மையக்கருவாக
தனியார் மய சிந்தனையாளனாக
வலம் வருகிற ஒட்டு மொத்த
தாராள மயமாதலின் சூத்திரதாரியாக
இருக்கிற மைய( அல்லது நடுவணரசு)
அரசு அகற்றப்படவேண்டும்.
வயிறு நிரம்ப சாப்பிட அனைவருக்கும்
உரிமை இருக்கிறது
நமது அரசியல் அமைப்பு சட்டத்தின் அடிப்படையில்....
ஆம் ஒரு நாய் பட்டினி கிடப்பதைக் கூட பொறுத்துக்கொள்ள மாட்டேன் என்று உரக்கச்சொன்ன துறவி விவேகானந்தர் வாழ்ந்த மண்ணல்லவா பாரதம்.
2 comments:
அண்ணா வணக்கம், நான் தங்கள் வலைப்பூவைப் பார்த்து பெருமையடைகிறேன். வாழ்த்துக்கள்
அன்புள்ள திரு மார்டின்!
வணக்கம்.விகடன் மூலமாக அறிமுகம் கிடைத்தமைக்கு மகிழ்ச்சி!தங்களது படங்களைப்பார்த்தேன்.தொடர்ந்து சிந்திப்போம். வாழ்த்துகள்
Post a Comment