"சொல்லக்கொதிக்குதடா நெஞ்சம்
வெறும் சோற்றுக்கே வந்ததிப்பஞ்சம்"
-மகா கவி பாரதி.
"அரசு உணவுக்கிடங்குகளில் தகுந்த முறையில் பாதுகாக்க வழியின்றி அழுகிக்கொண்டிருக்கும் அல்லது எலிகள்சாப்பிட்டுக்
கொழுத்துக்கொண்டிருக்கும் சுமார் 7 லட்சம் கோடி டன் உணவுப்பொருளை தேசம் முழுதும் பரவிக்கிடக்கும் 37 கோடி ஏழை ஜனங்களுக்கு இலவசமாக விநியோகிக்க வேண்டும்"
- உச்ச நீதி மன்றம்
"உச்ச நீதி மன்றம் குறிப்பிட்டது ஆணையல்ல;
வெறும் வழி காட்டுதலே அல்லது ஆலோசனை மட்டுமே "
-மத்திய வேளாண் மந்திரி சரத் பவார்.
ஆலோசனை ஒன்றும் வழங்கவில்லை;
உண்மையிலேயே ஏழைகளுக்கு இலவசமாக உணவுப்பொருட்களை வழங்கவே உச்ச நீதிமன்றம் உத்தரவிடுகிறது
-மறுபடியும் உச்ச நீதிமன்றம்.
அரசின் கொள்கைகளில் தலையிடுவதற்கு உச்சநீதி மன்றத்தின் வேலையல்ல. இலவசமாக விளை பொருட்களை வழங்கினால் அது விவசாயப்பெருங்குடி மக்களுக்கு செய்யும் துரோகம்
- பாரதப்பிரதமர் மன்மோகன் சிங்
'பெரிய மனுஷன் சொன்னா பேப்பரிலே போடுவாங்க
சின்ன மனுஷன் சொன்னா ஜெயிலிலே போடுவாங்க'
- கலைவாணர் என். எஸ் கே.
சரியான ஒரு தீர்ப்புக்கு மிகச்சரியான நேரத்தில் ( ?)
பத்திரிகையாளர் மத்தியில் தனது அக்கரையை (!)
வெளிப்படுத்தியிருக்கிறார் பிரதமர்.
இதேபோல தொலைத்தொடர்புத்துறையில் நடந்த
2 ஜி ஏலத்தின் போது (சுமார் ஒரு லட்சம் கோடி ரூபாய்)
பிரதமரின் ஆலோசனைப்படிதான் குறைந்த விலைக்கு
ஏலம் விடப்பட்டது என்று தொடர்ச்சியாக சொல்லிகொண்டிருந்த
மந்திரியின் குரலுக்கு
இதுவரை வாய் திறக்காத நமது பிரதமரை நினைத்தால்....
உண்மையிலே சொல்லக்கொதிக்குது நெஞ்சம்.
2 comments:
கோபமும், கொதிப்பும்தான் வருகிறது தோழனே!
மாது!
வருகைக்கும் பகிர்வுக்கும் நன்றி!
Post a Comment