வலைப்பதிவில் தேட...

Thursday, August 5, 2010

மாண்பு மிகுந்தவர்கள்...

காமன் வெல்த் போட்டி வரும் அக்டோபரில் நடக்க இருக்கிறது. டெல்லிமாநகரத்தில். ரூபாய் 36000 கோடி அளவுக்கு  ஊழல் நடைபெற்றுக்கொண்டிருப்பதாக கும்பகோணம் மாண்பு மிகு எம்.பி மணிசங்கர அய்யர் தெரிவித்து இருக்கிறார். அவர் காங்கிரஸ் மந்திரிசபையிலும் கூட இருக்கிறார்.

சுமார்    ஏழு  நூறு கோடி ரொக்கப்பணம் டெல்லி மாநில அரசாங்கத்தால் அட்டவணை சாதியினருக்கென்று பிரத்தியேகமாக ஒதுக்கப்பட்ட தனி நிதியினின்றும் இந்த விளையாட்டுப்போட்டிக்கு  ஒதுக்கப்பட்டிருப்பதாக உறுதிப்படுத்தப்பட்ட செய்திகள் வெளி வந்து கொண்டிருக்கிறது. RTI  சட்டத்தின் அடிப்படையில் வந்த புள்ளி விபரங்களை தன்னார்வ நிறுவனம் ஒன்று கையில் வைத்திருக்கிறது.

இதே போலத்தான் நமது மதுரை எம். பி மற்றும்  உர மந்திரி செம்மொழி மா நாட்டுப்பந்தலிலிருந்து பறந்து சென்று பெட்ரோல் டீசல் விலை உயர்வுக்கு
காபினெட்டில் சம்மதம் தெரிவித்து விட்டு வந்தார். பெட்ரோல் உயர்வு சிறிதளவேனும்  மக்களைப்பாதிக்கத்தான் செய்யும் என்று பொன்மொழி விடுத்தார் கோவையில்.

விலைவாசி உயர்வு குறித்து பாராளுமன்றத்தில் பணிகள் முடங்கும் அளவுக்கு விவாதங்கள் வாதப்பிரதிவாதங்கள் தெரித்துக்கொண்டிருக்கிறது.

முப்பத்தி மூன்று சதமான மகளிர் ஒதுக்கீடு
இந்தப்பரபரப்பில் நிறைவேறத்தான் வேண்டும்.


பாதி மந்திரிமார்கள் பாராளுமன்றத்திலும், ராஜ்ய சபையிலும் கோடீஸ்வரர்களாக வயது வரம்பின்றி குழுமி இருப்பதை அவ்வப்போது ஃபோர்ப்ஸ் உள்ளிட்ட பத்திரிகைகள்  அறிவித்துக்கொண்டிருக்கின்றன.

ஏற்கனவே 2ஜி அலைக்கற்றை ஒதுக்கீட்டில்   ஒரு லட்சம் கோடிக்கும் மேல் ஊழல் நடைபெற்றதாகக்கூறப்படும் தொலைத்தொடர்பு மந்திரி
எந்த பாதிப்பும் இல்லாமல்  3 ஜி யில் அரசுக்கு அதிக லாபம் செய்துகொண்டிருக்கிறார்.

பி எஸ் என் எல்  நிறுவனத்திடமிருந்து ரூபாய் 18 500 கோடி ரூபாய் அரசுக்கு 2ஜி சேவைக்காகவும் அகன்ற கற்றை சேவைக்காகவும் அரசுக்கு கப்பம் கட்டிய வகையிலும் முழுமையான அரசு நிறுவனமோ மற்ற தனியார் தொலைத்தொடர்பு நிறுவனங்கள் கட்டுவதைப்போன்று
அல்லது அரசு நிர்ணயித்தபடி பணம் கட்டி சேவை செய்வதன் விளைவாகவும்
முதன் முறையாக ரூபாய்   1823  கோடி ரூபாய் நஷ்டத்தில் இயங்கித்துவங்கியிருக்கிறது.

ஆனாலும் என்ன மக்களின் பிரதி நிதிகளான நமது மாண்பு மிகு உறுப்பினர்களின் சம்பளம்தான் உயரப்போகிறதே! அவர்கள் தற்சமயம் பெற்று வருவதைப்பாருங்கள்:
மாதசம்பளம்                                                 : ரூ 12000
மாத தொகுதி செலவு                              : ரூ 10000
மாத அலுவலக செலவு                         : ரூ 14000
மாத பயண செலவு                                    : ரூ 48000
தினசரி படி                                                      : ரூ     500
முதல் வகுப்பு ஏ சி ரயில் பயணம்( அகில இந்திய அளவில்) எத்தனை முறையேனும்.
விமானப்பயணம் வருடத்திற்கு            40  முறை
(மனைவியுடன்/உதவியாளருடன்)
எம் பி தங்கும் வீடு டெல்லியில்           : இலவசம்
மின்சார செலவு  அதிகபட்சம்                   50000 யூனிட்டுகள்
இலவச தொலைபேசி அழைப்புகள்    170000  கால்கள்
மாத செலவு மட்டும்                                    2.66  லட்சங்கள்.
வருடத்திற்கு சுமாராக                               32  லட்சங்கள்
ஐந்து ஆண்டுகளுக்கு சராசரியாக
 ஒரு எம் பிக்கு  ஆகும் செலவு            : 1,60,00,000
(ஒரு கோடியே அறுபது லட்சம் மட்டும்தான்).

இந்த சலுகைகளும் சம்பளமும் போதாதென்று ஒவ்வொரு எம்.பிக்கும் ஆகும் செலவை நடப்புக்கூட்டத்தொடரிலேயே
ஐந்து மடங்கு அதிகரிக்க முடிவும் செய்யப்பட்டுள்ளது.

இந்தியன்என்பதில் பெருமை கொள்ள வேண்டிய தருணமாகவும் நம்மை நாமே
இவர்களோடு சமகாலத்தில் வாழும் திறன் படைத்த  பாக்கியவான்களாகக் கருதிக்கொள்ளவுமான  நேரமல்லாமல் வேறென்ன?

2 comments:

Anonymous said...

After so many scandalous information has been exposed by the media, only way by which Suresh Kalmadi can escape sacking is to join D M K. And take adice from Hon'ble Raja for repeating such acts in future events.

அழகிய நாட்கள் said...

நண்பர் அனானிக்கு,
கல்மாதி தி மு க வில் சேர்ந்து தனது நடவடிக்கைகளை நியாயப்படுத்துவாரா என்பது தெரியாது. முந்திரா ஊழல் தொடங்கி ராணுவத்திற்கு பிணக்கூடுகள் வாங்கியது வரை தேசீயக்கட்சியின் நெடி என்னவோ தொடர்ந்து அடித்துக்கொண்டுதான் இருக்கிறது. ஆறு கோடி டன் உணவு தானியம் வீணானாலும் மக்களுக்கு பொது வி நியோக முறையில் சாப்பாட்டுக்கான ஏற்பாடுமட்டும் கிடையாது எலிகள் கூட இந்த விஷயத்தில் கொடுத்து வைத்தவைகள்.